இந்தோனேஷியா நாட்டில் பொலிஸ் படையில் சேரும் பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடப்பது பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
உலகில் அதிகளவில் இஸ்லாமியர்களை கொண்ட இந்தோனேஷியாவில் பொலிஸ் வேலையில் பெண்கள் சேருவது பெரும் பாடாக உள்ளது.
அங்கு பொலிஸ் படையில் சேர விரும்பும் பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை கட்டாயம் ஆக்காப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மனித உரிமையை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், சமீபத்தில் இந்த சோதனைக்கு பல பெண்கள் உட்படுத்தப்பட்டதாகவும், கன்னிப்பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பெண் மருத்துவர்களால் இரு விரல் சோதனை நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சோதனையை மிகவும் அபாயகரமானது என்றும் இது அவமானமான செயல் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுமையாக விமர்சித்துள்ளது.
மேலும் இந்த சோதனையால் நேர்ந்த அவமானங்களை பற்றி கூற விரும்பவில்லை என 19 வயது பெண் ஒருவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இதற்கிடையே பல பெண்கள் இந்த கேவலமான செயலால் அழுது மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment