Friday, November 21, 2014

கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியில் மீண்டும் அரசியலில் பிரவேசித்துள்ளேன்: சந்திரிக்கா

ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 8ம் திகதி: தேர்தல் திணைக்களம்
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 01:10.13 PM GMT ]
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம்  8ம் திகதி நடைபெறவுள்ளது.
தேர்தல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhu7.html


கிளிநொச்சி சாந்தபுரத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட வீதிகளை சீரமைக்க கரைச்சி பிரதேசசபை நடவடிக்கை
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 01:24.21 PM GMT ]
கிளிநொச்சி சாந்தபுரத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட வீதிகளை சீரமைக்க கரைச்சி பிரதேசசபை நடவடிக்கை எடுத்துள்ளது.  
மழையினால் வீதிகளில் வெள்ளம் தேங்கியுள்ள நிலையில் மக்கள் மற்றும் மாணவர்கள் போக்குவரத்துக்கு பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் அக்கிராம பொது அமைப்புக்கள் கரைச்சி பிரதேச சபை தலைவரிம் நேரடியாக வேண்டிக் கொண்டிதற்கு இணங்க அந்த வீதிகளை உடன் கனரக இயற்திரங்கள் மூலம் சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று வீதிகளை நேரில்  கரைச்சி பிரதேச தலைவர் நாவை.குகராசா வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் மாவட்டத்தின் உபதலைவருமான பொன்.காந்தன் ஆகியோர் பார்வையிட்ட பின் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் சாந்தபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் யோகன் மற்றும் உறுப்பினர்களும் உடன் இருந்தனர்.

கொழும்பு பங்குச் சந்தையில் திடீர் வீழ்ச்சி - ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 8ம் திகதி: தேர்தல் திணைக்களம்
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 01:34.58 PM GMT ]
இலங்கையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கொழும்பு பங்கு சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனடிப்படையில் நேற்றைய தினத்துடன் ஒப்படும் போது இன்றைய மொத்த விலை சுட்டெண் 128.7 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்துள்ளது. எஸ் என்ட் பி எஸ்.எல் 20யின் விலை சுட்டெண் 63 புள்ளிகளாக குறைந்துள்ளது.
நாட்டில் இன்று ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைமைகள் இதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் இது தற்காலிகமான நிலையமையாக இருக்கலாம் எனவும் கொழும்பு பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 8ம் திகதி: தேர்தல் திணைக்களம்
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம்  8ம் திகதி நடைபெறவுள்ளது.
தேர்தல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhv0.html


கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியில் மீண்டும் அரசியலில் பிரவேசித்துள்ளேன்: சந்திரிக்கா
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 02:08.26 PM GMT ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க முயற்சித்த போதும் அதற்கான ஒப்புதல் தமக்கு கிடைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பொதுவேட்பாளராக அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார்.
சுமார் 9 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்ற சொந்தவீட்டின் ஊடாக அரசியலில் பிரவேசித்துள்ளதாக சந்திரிக்கா குறிப்பிட்டார்.
தாம் மீண்டும் அரசியலில் பிரவேசிப்பது தமது பிள்ளைகளுக்கு விருப்பமில்லை. தம்மை மஹிந்த கொன்று விடுவார் என்று அவர்கள் பயப்ப்பட்டனர்.

எனினும் நாட்டுக்காக தமது கட்சியினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகக்கு ஒத்துழைப்பு வழங்க தாம் முன்வந்துள்ளதாக சந்திரிக்கா கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நியமித்துள்ளமையானது முக்கியமான திருப்பம் என்று குறிப்பிட்டுள்ள சந்திரிகா, அவரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராகவும் நியமிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் நீதிமுறை இன்று வீழ்ந்து போயுள்ளது. பொலிஸ்துறை பக்கச்சார்ப்பானதாக மாறியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பை முடித்து விட்டு செல்லும் போது தமது உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் சந்திரிக்கா குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment