இதுவரை 2,192 பேரைக் கொலைசெய்துள்ள இஸ்ரேலிய நபர்: இதில் 519 பேர் சிறுவர்கள் என்பது தான் அதிர்சி தகவல். ஆம் அதுவேறு யாரும் அல்ல இஸ்ரேல் நாட்டின் ஆளில்லா விமான ஓட்டி தான். மேஜர்.ஜாகீர் என்னும் நபர் ஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் எல்லையில் குண்டுபோடும் ஆளில்லா விமானத்தை செலுத்தி வரும் நபர் ஆவார். இவர் இஸ்ரேலில் இருந்தபடி ஆளில்லா விமானத்தை செலுத்துகிறார். (ரிமோட் கன்றோலில்) . இவர் காஸா பகுதியில் போட்டுள்ள குண்டுகளின் எண்ணிக்கையை விட இவர் கொலைசெய்த பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை தான் அதிகம். இவர் இதுவரை விமானத்தை செலுத்தி போட்ட குண்டுகளால் சுமார் 2,195 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
மேஜர். ஜாகீர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், தாம் விடும் சில பிழைகளால் தான் இது நடக்கிறது என்று சர்வசாதாரணமாகக் கூறியுள்ளார். ஆனால் மனிதன் தான் விடும் பிழைகளில் இருந்துதான் தன்னை திருத்திக்கொள்கிறான் என்று தத்துவம் வேறு பேசியுள்ளார். இவர் விடும் பிழை பல உயிர்களை அல்லவா பலியெடுக்கிறது ? நீங்கள் எவ்வாறு நிம்மதியாக உறங்குகிறீர்கள் என்று ஒரு ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளார் .. 519 சிறுவர்களை கொலைசெய்து விட்டு எப்படி உங்களால் இருக்க முடிகிறது ? இவ்வாறு பேச முடிகிறது என்று அவர் கேட்ட கேள்விகள் நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி இருந்தது. அந்த ஊடகவியலாளருக்கு நன்றி... வேறு யாரும் இவரிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்க்க முடியாது அல்லவா ?
No comments:
Post a Comment