தனது காதலியை முத்தமிட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு எனது காதலியை தொடாதே என காதலன் நேருக்கு நேர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் சிக்காக்கோ நகரின் மார்டின் லூதர் கிங் சமுதாய நிலையம் ஒன்றில் ஆளுநர் தெரிவுக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
குறித்த வாக்கெடுப்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வாக்களித்து கொண்டிருந்தார், அவர் அருகே ஆயியா கூப்பர் என்ற இளம் பெண் ஒருவரும் வாக்களித்துக் கொண்டிருந்தார்.
வாக்களித்து முடிந்தவுடன், ஒபாமா அப்பெண்ணை கட்டிப்பிடித்து உதட்டில் முத்தமிட்டார், இதனை அவதானித்த ஆயியாவின் காதலன் மைக் ஜோன்ஸ் எரிச்சலடைந்து ஒபாமாவை நேருக்கு நேராக பார்த்து எனது காதலியை தொடாதே என எச்சரிப்பது போன்று பேசியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத ஒபாமா சகோதர பாசத்துடன் தான் நான் அப்படி நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
obama_crack
obama_1