கடந்த வாரம் உலகெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை, பிரித்தானியாவிலும் 5 நாட்கள் கொண்டாடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டரில்(Westminster) நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தனது மனைவி சமந்தா(Samantha Age-43) கேமரூனுடன் கலந்து கொண்டுள்ளார்.
ராயல் புளு நிறமும், தங்க ஜரிகையும் கொண்ட புடவையை உடுத்தி கேமரூனுடன் வந்த சமந்தா, மெழுகுவர்த்தியை ஏற்றி தீபாவளி கொண்டாட்டத்தை தொடக்கி வைத்தார்.
இதன்பின் தீபாவளி வாழ்த்து தெரிவித்த டேவிட் கேமரூன், நாட்டில் உள்ள 8 மில்லியன் இந்துக்களுக்கு தீபாவளி உரையாற்றியுள்ளார்.
|
No comments:
Post a Comment