Sunday, September 28, 2014

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவு வெளியானது! - மாவட்டங்களுக்கான குறைந்தபட்ச புள்ளிகளும் வெளியீடு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் சற்று முன்னர் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்தப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் தினத்தைக் கொண்டாடும் முகமாக ஒக்டோபர் முதலாம் திகதிக்கு முன்னராக புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தீர்மானித்திருந்தார்.
இதன் பிரகாரமே இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் முன்னதாக வெளியிடப்படுகின்றன.
கடந்த ஒகஸ்ட் மாதம் 17ம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மூன்று லட்சத்து 35 ஆயிரத்து 585 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் குறைந்தப்பட்ச புள்ளிகள்
இலங்கையில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தின் ஊடாக வெளியாகியிருக்கின்றன
இந்தநிலையில் மாவட்டங்களுக்கான குறைந்தபட்ச புள்ளிகளும் வெளியாகியுள்ளன
இதன்படி யாழ்ப்பாணம் 158, மட்டக்களப்பு 158, கிளிநொச்சி 147, முல்லைத்தீவு 147, நுவரெலிய 157, கொழும்பு 159, கம்பஹா 159, களுத்துறை 159, கண்டி 159, மாத்தளை 159, காலி 159, மாத்தறை 159, ஹம்பாந்தோட்டை 155, மன்னார் 157, வவுனியா 158, அம்பாறை 158, திருகோணமலை 158, குருநாகல் 159, புத்தளம் 156, அநுரதபுரம் 155, பொலநறுவை 157, பதுளை 156, மொராகலை 158,இரத்தினபுரி 157,கேகாலை 159 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVhp3.html

No comments:

Post a Comment