Tuesday, September 23, 2014

லாட்டரியில் 45 கோடி விழுந்தது தெரியாமல் தெருவை சுத்தம் செய்ய புறப்பட்ட லண்டன் நபர் !


லண்டன்: வடக்கு லண்டனில் வசிக்கும் ஜோசப் வைட்டிங்(42), தெரு பெருக்கும் வேலை செய்பவர். அவர் வாங்கின லாட்டரி சீட்டுக்கு 45 லட்சத்து 70 ஆயிரத்து 887 பவுண்டு (இந்திய மதிப்புக்கு சுமார் 45 கோடி ரூபாய்) பரிசு விழுந்துள்ளது. வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு தெரு பெருக்கும் வேலைக்கு புறப்பட்ட ஜோசப், அந்த லாட்டரி கடை வாசலுக்கு வந்தபோது அவர் வாங்கிய சீட்டுக்குதான் பரிசு விழுந்துள்ளது என்பதை உறுதி செய்துக் கொண்டார். எனினும் கோடீஸ்வரனாகி விட்டோமே என்ற ஆணவம் கொஞ்சமும் இன்றி வழக்கம் போல் துடைப்படத்தை பிடித்து தனக்கு ஒதுக்கப்பட்ட தெருவை பெருக்கத் தொடங்கினார்.
3 பிள்ளைகளுக்கு தந்தையான ஜோசப் வைட்டிங், கடந்த 14 ஆண்டுகளாக வடக்கு லண்டன் பகுதியில் தெருக்களை கூட்டிப் பெருக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தனது உறவினர் ஒருவருக்காக ரொட்டி வாங்க கடைக்கு சென்றபோது, குலுக்கலுக்கு சுமார் 15 நிமிடம் முன்னதாக அந்த அதிர்ஷ்ட சீட்டை ஜோசப் வாங்கியுள்ளார். விரைவில் வேலையை ராஜினாமா செய்து விட்டு, டிஸ்னிலேண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு தனது பிள்ளைகளுடன் சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளார்.
இதுநாள் வரை நான் பார்த்துவந்த தொழில் ஒன்றும் அவ்வளவு கேவலமான தொழில் அல்ல என்றும் ஜோசப் வைட்டிங் கூறினார். 

No comments:

Post a Comment