Friday, August 22, 2014

சிலை வடிக்கும் அளவுக்கு அனைத்து அங்க லட்சணத்தையும் ஒருங்கே கொண்ட நடிகை!


சிலை வடிக்கும் அளவுக்கு அனைத்து அங்க லட்சணத்தையும் ஒருங்கே கொண்ட நடிகை பற்றி நடிகர் சிவகுமார் பேசினார்.
அழகிய முகத்தோற்றம்
மெட்ராஸ் பார் அசோசியேஷனின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை ஐகோட்டில் நேற்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கலந்துகொண்டு நடிகர் சிவகுமார் பேசியதாவது:-
சிறுவயதில் சிலரது முகம் அழகற்று இருக்கலாம். ஆனால் அவர்களின் நல்ல வாழ்க்கை முறையின்படி பின்னர் அழகிய முகத் தோற்றத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். காந்தியடிகள், ஆபிரகாம்லிங்கன் ஆகியோர் இதற்கு நல்ல உதாரணம்.
சமஅளவு முகம்
ஒவ்வொரு நாளும் 166 முறை பிரணாயாமம் செய்தால் 166 ஆண்டுகள் வாழலாம் என்று முன்னோர் கூறியுள்ளனர். ஆனால், அது மிகவும் கடினமான விஷயம். நான் தினமும் 84 முறை பிரணாயாமம் செய்கிறேன்.
மனிதர்களில் இரண்டு பக்க முகமும் சமஅளவில் இருப்பவர்கள் அபூர்வம். ஏதாவது ஒரு பக்கத்தில் ஒரு விஷயம் இருக்கும். எனக்கும், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக் கும் இடது தாடை சற்று பெரியதாக இருக்கும். எம்.ஜி.ஆருக் கும், சிவாஜி கணேசனுக்கும் வலது தாடை சற்று பெரியதாக அமைந்திருக்கும்.
எல்லா லட்சணமும்
கடந்த 60 ஆண்டுகளில் நான் பார்த்த அளவில் எல்லா லட்சணமும், அதாவது சிலை வடிக்கும் அளவுக்கு சாமுத்திரிகா லட்சணங்கள் ஒருங்கே அமைந்த நடிகை வைஜந்தி மாலாதான்.
தினமும் காலை 4 மணிக்கு எழுந்து ஆறரை மணி வரை நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும். பசித்த பின்னர் சாப்பிடும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் ஆயுளில் 10 ஆண்டுகள் கூடும்.
அதுபோல் தினமும் 7 மணி நேரம் தூங்க வேண்டும். 5 மணி நேரம் மட்டும் தூங்கினால் இருதய நோய் வருவதற்கு 40 சதவீதமும், 3 மணி நேரம் மட்டுமே தூங்கினால் அந்த நோய் வருவதற்கு 70 சதவீதமும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கல்வி நிதியுதவி
இந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் கே.ஆர்.தமிழ்மணி தலைமை தாங்கினார். செயலாளர் வி.ஆர்.கமலநாதன் நன்றி கூறினார். கல்லூரி மாணவ, மாணவிகள் சிலருக்கு சங்கம் சார்பில் நிதியுதவிகளை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், ஐகோர்ட்டு நீதிபதிகள், மூத்த வக்கீல்கள் மற்றும் வக்கீல்கள் பலர் கலந்துகொண்டனர்.








No comments:

Post a Comment