Saturday, August 23, 2014

இங்கிலாந்தில் ஹொலிவூட் திரைப்படத்தை இணையத்தில் பதிவேற்றியவருக்கு அதிரடி சிறைத்தண்டனை !



இங்கிலாந்தில் ஹொலிவூட் திரைப்படமொன்றை இரகசியமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு 33 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிலிப் டான்க்ஸ் என்ற 25 வயது இளைஞர் ஒருவருக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த நபர் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பல மில்லியன் டொலர்கள் கணக்கில் வருமான இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இணையத்தில் பதிவேற்றம் செய்திருந்த ஃபாஸ்ட் என்ட் ஃப்யூரியஸ் 6 என்ற திரைப்படம் 7 இலட்சம் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் டேட்டிங் இணையதளம் ஒன்றிலும் திருட்டுப் பட இணையதளம் ஒன்றிலும் பிலிப் டான்க்ஸ் பயன்படுத்திவந்த இணையதள புனைப்பெயரைக் கொண்டு அவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும் இவருக்கு ஒத்துழைப்பு வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள மைக்கல் பெல் என்பவருக்கு சமூக ஒழுங்குப்படி 120 மணித்தியாலங்கள் ஊதியமில்லாப் பணி செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment