Saturday, August 30, 2014

மார்பங்களை பெரிதாக்கவேண்டும்: ஆனால் அழகு ராணி பட்டம் வென்றவர் கிரீடத்துடன் தலைமறைவு !

தென்கிழக்கு ஆசிய அழகி என்னும் பட்டத்தை வென்ற, பர்மா நாட்டு பெண் 120,000 பவுன்டுகள் மதிப்புள்ள கிரீடத்துடன்(அழகுராணி முடி) தலைமறைவாகியுள்ளார். இவர் ஏன் தலைமறைவாகவேண்டும் என்று கேட்கிறீர்களா ? நடைபெற்ற போட்டியில் இவர் அழகு ராணி என்னும் பட்டத்தை வென்றார். ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட அந்த கிரீடத்தையும் குழுவினர் அவருக்கு சூட்டினார்கள். ஆனால் அவருடைய மார்பங்கள் மிகவும் சிறிதாக இருந்ததாம். இதனால் மார்பங்களை செயற்கை முறையில் சற்று பெரிதாக்கிக் கொண்டு வந்தால், அந்த பட்டத்தை முழுமையாக தாருவதாக ஏற்பாட்டாளர்கள் இறுதி முடிவை எடுத்தார்கள். பெயரளில் வழங்கப்பட்ட பட்டம், நிஜமாகவேண்டும் என்றால் மருத்துவமனை சென்று மார்பங்களை பெரிதாக்க வேண்டும் என்று அவர்கள் கட்டளை இட்டார்கள்.
இதற்காக சிலர் 6,000 பவுண்டுகளை அப்பெண்ணுக்கு வழங்கியும் இருந்தார்கள். 18 வயதான் இப் பெண் காசைப் பெற்றுக்கொண்டு மார்பங்களை பெரிதாக்க வில்லை. ஏற்பாட்டுக் குழுவினரை ஏமாற்றி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஏற்பாட்டுக் குழுவினர் தாம் கொடுத்த அழகு ராணி என்னும் பட்டத்தை திரும்பப் பெறுவதாகவும், அவர் இனி அழகு ராணி இல்லை என்றும் அறிவித்தார்கள். ஆனால் இவர்களுக்கு எல்லாம் மரண ஆப்பு வைத்துவிட்டார் அப் பெண். என்ன என்று கேட்க்கிறீர்களா ? இந்த கிரீடத்தை எடுத்து எப்படி நீங்கள் இன்னும் ஒரு பெண்ணுக்கு கொடுப்பீர்கள் என்று நானும் பார்கிறேன் என்று சொல்லி, அவர் கிரீடத்துடன் தலைமறைவாகிவிட்டார். அந்த கிரீடத்தின் விலை மட்டும் சுமார் 1 லட்சத்தி 20,000 ஆயிரம் பவுண்டுகள் வரும் என்கிறார்கள்.
தற்போது அழகு ராணியையும் காணவில்லை, கிரீடத்தையும் காணவில்லை தென் கிழக்கு ஆசிய அழகு ராணி போட்டி நடத்தும் குழுவினர் தலையில் கை வைத்து உட்கார்ந்துள்ளார்கள். அது சரி இவர் எங்கே இருக்கிறார் என்பது எவருக்கும் தெரியாதாம். நீங்கள் பார்த்தீர்களா ?

No comments:

Post a Comment