Tuesday, August 19, 2014

நீண்ட நாட்களுக்குப் பின்னர் மழையைக் கண்ட வட கிழக்கு மக்கள்!


நீண்ட காலமாக வறட்சி நிலவி வந்த பிரதேசங்களில் நேற்றிரவிலிருந்து மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டத்தில் ஆறு மாதங்களாக நிலவிய வரட்சியை அடுத்து நேற்றிரவு முதல் மழை பொய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் போதியளவு மழை வீழ்ச்சி கிடைக்காமையால் நீர்த்தேக்கங்களில் நீரை சேமிக்க முடியாத நிலை காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
72 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 14 வீதமாக குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமத்துவ பணிப்பாளர் மீகஸ்தென்ன குறிப்பிட்டார்.
அநுராதபுரம், அம்பாறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மழை பெய்துள்ளது.
இதனிடையே நாடு முழுவதிலும் இன்று மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அண்மைக் காலங்களில் கடும் வறட்சி நிலவியதால் விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைகள் தண்ணீருக்கு அல்லல் பட்டுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyISdLdix5.html

No comments:

Post a Comment