Monday, August 25, 2014

இங்கிலாந்தில் ஒரே இரவில் தோன்றிய 100 அடி ஆழமான பள்ளம் !


இங்கிலாந்தில் ஒரே இரவில் சுமார் 100 அடி ஆழத்திற்கு அதிகமான திடீர் பள்ளம் ஒன்று தோன்றியுள்ளது. வடகிழக்கு இங்கிலாந்து நாட்டிலுள்ள County Durham என்ற இடத்தில் 71 வயதுடைய John Hensby என்பவர் வைத்திருக்கும் ஆட்டுப் பண்ணையருகே இந்தப் பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒரே இரவில் சுமார் 100 அடி ஆழத்திற்கும் அதிகமான மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் கடும் அதிர்ச்சிடைந்துள்ளதாகவும் தன்னுடைய மனைவி Sam Hillyard இருவரும் அந்த பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் ஆட்டுப் பண்ணை உரிமையாளர் தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை காலை எழுந்து பார்த்தால் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பள்ளம் தோன்றியுள்ளதாக அவர் கூறினார். தன்னுடைய பண்ணையில் உள்ள ஆடுகள் அந்த பள்ளத்தில் தவறி விழுவதற்கு வாய்ப்புள்ளதால் தான் மிகவும் அச்சமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பள்ளத்தின் முடிவு எங்கே இருக்கின்றது என்பதே தெரியவில்லை என்றும், பூமிக்கடியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகவே இதுபோன்ற பள்ளம் தோன்றியிருக்கலாம் என்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இந்த திடீர் பள்ளம் குறித்து Durham என்ற பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆய்வு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment