Tuesday, July 22, 2014

திருடிய ஆடைகளுடன் சூப்பர் போஸ்: கையும் களவுமாக சிக்கிய கர்ப்பிணி !

திருடிய ஆடைகளுடன் சூப்பர் போஸ்: கையும் களவுமாக சிக்கிய கர்ப்பிணி
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 12:07.26 பி.ப GMT ]
ஜேர்மனியில் ஒரு கர்ப்பிணி பெண் திருடிய ஆடையுடன் படமெடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றி மாட்டிக் கொண்டுள்ளார்.மேற்கு பிராங்போர்ட் பகுதியில் வாழும் டேனியல் சாக்ஸ்டோன் (27) என்ற கர்ப்பிணி பெண் ஜவுளிகடையில் ஒன்றில் துணிகள் வாங்க சென்றுள்ளார்.
ஆனால் அவர் எதுவும் வாங்காமல் கடையின் மறுபக்க வழியாக சென்றுள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து, கடை உரிமையாளர் கடையில் இருந்த சில துணிகள், சில அணிகலன்கள் திருட்டு போய் இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
இதையடுத்து மற்றொரு உரிமையாளர் பாதுகாப்பு கமெராவில் பதிவாகி இருந்த டேனியலின் படத்தை தங்களது ஜவுளிக்கடை பேஸ்புக் பக்கத்தில் போட்டு இவரை அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்கவும் என பதிவு செய்துள்ளார்.
மேலும் சாக்ஸ்டோன் தான் திருடிய ஆடைகளை அணிந்து புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவு செய்ததால், ஜவுலிக்கடையின் பதிவை பார்த்தவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சில மணி நேரங்களில் சாக்ஸ்டோன் கைது செய்யபட்டுள்ளார்.


No comments:

Post a Comment