Saturday, June 28, 2014

முத்தம் கொடுத்த தாத்தா: தண்டனையை கேட்டவுடன் மரணம் (வீடியோ இணைப்பு) !

சிறுமிக்கு முத்தம் கொடுத்த முதியவர் தண்டனையை கேட்டவுடன் மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கிளீவ்லேண்ட் பகுதியை சேர்ந்தவர் மிகுல் ஐபெர் (51). இவர் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த 14 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்தார்.
இதைப்பார்த்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார்கொடுத்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி மைக்கேல் இயர்லி குற்றவாளிக்கு 2 மாதம் சிறைத்தண்டனை வழங்குவதாக தீர்ப்பு கூறியுள்ளார்.
தீர்ப்பை கேட்டவுடன் மிகுல் அதிர்ச்சி அடைந்தார். அவரை காவலர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்து வந்தனர் அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் மரணம் அடைந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் தீர்ப்பு அளித்த நீதிபதி உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

No comments:

Post a Comment