Monday, June 30, 2014

வட மாகாணசபையின் சுகாதாரக் குழுவில் அசமந்தம்!

வட மாகாண சபையின் சுகதாரக் குழு கடந்த ஒன்பது மாத காலத்தில் ஒரேயொரு தடவைதான் இது வரை கூடியுள்ளதாக வட மாகாண சபையின் சுகாதார அமைச்சர் வட மாகாண சபையின் நடவடிக்கையின்போது தெரிவித்த விடயம் பொது மக்கள் மத்தியில் பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று மாதங்குளுக்க முன்னர் வட மாகாண சுகாதார பரிசோதகாகள் மேற்க்கொள் வேலை புறக்கணிப்பு போராட்டம் மற்றும் சுகதார வைத்தியர்கள் நடத்திய போராட்டம் மற்றும் விடப்பட்ட கோரிக்கைகள் காரணமாக பொது மக்கள் அசௌ கரியங்களுக்கு உள்ளாகிய போதிலும் அதனையிட்டு தனி நபர் முடிவுகளே பொது மக்கள் பாதிப்பக் காரணமாக அமைந்ததாக தற்போது பொது மக்கள் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளார்கள்.
குறிப்பாக பல ஆயிரங்களை சம்பளமாக பெற்றுக் கொண்டு மாத்தில் ஒரு நாள் வந்து சபையின் கூட்டத்தில் ஐந்து மணித்தியாலம் முதல் ஏழு மணித்தியாலம் வரை இருந்து விட்டு சென்றால் சரியென்ற நிலையை விடுத்து மக்களுடைய பொதுப்பிரச்சனைகளை உரிய முழைறயில் இனம் கண்டு அதனை தீப்பதற்க்கும் மற்றும் விரைவு படுத்துவதற்க்கும் வசதியாக சுகாதாரக்குழுக் கூட்டங்களை மாதத்தில் இரண்டு தடவைகள் ஏனும் கூடி முடிவுகளை எடுக்க முன்வர வேண்டும் என பலரும் எதிர் பார்த்து இருக்கின்றார்கள்.

No comments:

Post a Comment