Sunday, June 1, 2014

கிளிநொச்சி அரச அதிபரின் நில ஆக்கிரமிப்பு வெளிச்சத்தில்..

தமிழகம் தர்மபுரியில் இலங்கை அகதிகளுக்கு வீடமைப்புத் திட்டம்

இந்த பகுதியில் உள்ள வன்னியர் முகாமில் 41 வீடுகளும், தும்பலாளியில் 150 வீடுகளும் இவ்வாறு நிர்மாணிக்கப்படுகின்றன.  இதன் நிர்மாணப் பணிகள் விரைவாக இடம்பெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு இந்த வீடுகள் அகதிகளுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/71484.html

கிளிநொச்சி அரச அதிபரின் நில ஆக்கிரமிப்பு வெளிச்சத்தில்..

புதிதாக கட்டப்படும் கிளிநொச்சி மாவட்ட செயலக கச்சேரியின் காணி கரைச்சிப் பிரதேச சபைக்கு சொந்தமானதென கண்டறியப்பட்டுள்ளது. எனினும் பிரதேசசபைக்கு சொந்தமான காணியில் கட்டிடம் கட்டுவதற்கு கரைச்சி பிரதேச சபையிடம் அனுமதி பெறப்படவில்லையெனவும் அரச அதிபர் தன்னிச்சையாக அதனை கட்டுவிப்பதும் அம்பலமாகியுள்ளது.

வன்னி இராணுவக்கட்டளை பீடத்தின் செல்லப்பிள்ளையான கிளிநொச்சி அரச அதிபர் தன்னிச்சையாகவே செயற்பட்டுவருவதுடன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபையினை நிராகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/71481.html

No comments:

Post a Comment