Thursday, May 1, 2014

யு.எஸ்சில் ஒரு பையன் சம்பந்தமாக Facebookல் ஆரம்பித்த வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது.


சிக்காகோ- 14-வயது பெண் ஒருத்தி இன்னொரு பெண்ணை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஒரு பையன் காரணமாக ஏற்பட்ட சர்ச்சையே இக்கொலைக்கு காரணமென கூறப்பட்டுள்ளது. இந்த சமீபத்திய வன்முறைச் சம்பவம் சிக்காகோ தலைப்பு செய்திகளில் பெருமளவில் பேசப்படுகின்றது. ஒரு பையனுக்காக இரண்டு 14-வயது பெண்களிடையே ஏற்பட்ட கைகலப்பும் வாக்குவாதமும் ஒரு கொலையாக மாறிவிட்டதென சிக்காகோ பொலிஸ் மேலதிகாரி கரி மக்கார்த்தி தெரிவித்துள்ளார். அப்பெண் தலைவாயிலில் நின்ற சனக்கூட்டத்தை நோக்கி துப்பாக்கியை காட்டியபடி துப்பாக்கி விசையை இழுத்ததாகவும் ஆனால் சுட முடியவில்லை எனவும் அறிக்கை ஒன்றின் பிரகாரம் தெரியவந்துள்ளது. பின்னர் அவள் கூட்டத்தில் நின்ற ஒருவரிடம் துப்பாக்கியை கொடுத்து அதன் செயலிழப்பை சரிப்படுத்தி தரும்படி கேட்க அவர்களும் சரிப்படுத்தி திருப்பி கொடுக்க அச்சமயம் அவள் துப்பாக்கியால் சுட்டதாகவும் பொலிசாரின் கூற்றுப்படி .38-கலிப்ரே ரிவால்வர் என தெரியவந்துள்ளதாகவும் அறியப்படுகின்றது. 14-வயது சந்தேக நபர் ஒரு இளவயது குற்றவாளியாகையால் அவளது பெயர் வெளியிடப்படவில்லை. கொலைசெய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை ஒளித்து வைத்திருந்ததற்காக 17-வயது பையன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மூன்றாவது நபர் ஒருவரும் விசாரனைக்குட்படுத்தப் பட்டுள்ளார். இவரும் 17-வயது பையனும் சம்பவம் நடந்த இடத்திற்கு துப்பாக்கிளை கொண்டுவந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ளனர். - See more at: http://www.canadamirror.com/canada/25389.html#sthash.GaczfcwZ.dpuf

No comments:

Post a Comment