ரஷ்யாவில் பெண் ஒருவர் முதலை மீது விழுந்ததால் முதலையானது உயிருக்கு ஆபத்தான நிலையில் விலங்குகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் சர்க்கஸ் நடத்தி வரும் ஒரு குழுவினர், செவரோமோர்ஸ்க் பகுதியில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்த சிற்றுந்து ஒன்றில் பெட்யா என்ற முதலையை எடுத்து சென்றனர்.
சிற்றுந்தில், முன்பக்கம் பாதுகாப்பான முறையில் முதலையும், பின்பக்கம் ஊழியர்கள் இருந்தனர். பேருந்து ரஷ்யாவில் உள்ள முர்மான்ஸ்க்கில் இருந்து செவரோமோர்ஸ்க் என்ற பகுதிக்கு மிக வேகமாக சென்று கொண்டிருந்தது.
திடீரென பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த சுவரில் மோதியதால், உள்ளே உட்கார்ந்திருந்த சர்க்கசின் கணக்காளர் சீட் பெல்ட் அணியாததால் தூக்கி வீசப்பட்டார்.
இவர் 120 கிலோ எடையுள்ள ஒரு குண்டு பெண். இவர் மிகச்சரியாக முதலையின் மீது விழுந்ததால் முதலைக்கு படுகாயம் ஏற்பட்டது. தொடர்ந்து மூன்று மணிநேரமாக முதலைக்கு வாந்தி ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் விலங்குகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
முதலையின் உள்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
http://www.newsonews.com/view.php?22YOlx2bcg80C34edeMMa020BnB4dd3VBn5303o6AO2e4C08W2cbclOSe3
|
No comments:
Post a Comment