Saturday, May 31, 2014

உத்திரபிரதேச பலாத்காரம்: ஐ.நா கடும் கண்டனம் !

உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற பலாத்கார சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் பதௌன் மாவட்டத்தில் இரண்டு சகோதரிகள் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் "மிகக் கொடுமையான குற்றம்" என்று ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபனே துஜ்ஜரிக், சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக் கப்பட்டு, கொலை செய்து மரத்தில் தொங்கவிடப்பட்டிருப்பது மிகக் கொடுமையான குற்றம்.
அதனை கடுமையாக விவரிக்க வார்த்தைகளை தெரிவு செய்வதே கடினமாக உள்ளது. எனினும், இது மிக பயங்கரக் குற்றம் என்று கூறியுள்ளார்.
மேலும், ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு பெண்ணும் சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment