யாழ்.இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் நேற்று நடந்த யாழ்.றோட்டறிக் கழகத்தின் 73 ஆவது அகவை நிறைவு நாளும் சாதனையாளர் சிறப்புரை நிகழ்விலும், அமெரிக்கா அதிபரின் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான ‘மாற்றத்துக்கான சாதனையாளன்” விருதைக் கடந்த வருடம் பெற்றிருந்த இந்துவின் பழைய மாணவனும், அமெரிக்க விஞ்ஞானியும், அமெரிக்க இலியானோஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சிவலிங்கம் சிவானந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன் விழா ஏற்பாட்டாளர்களினால் கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன் மற்றும் வடமாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே. சிவஞானம், வடமாகாண சபை விவசாய அமைச்சர் ஜங்கரனேசன் உட்பட வடமாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய ஈழத்து விஞ்ஞானி சி.சிவானந்தன், மாணவர்கள் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுடன் உரையாடியதுடன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில்களை வழங்கினார். மேலும், தனது சிறுவயது பராயம் முதல் பௌதீகம் சார் விடயங்களில் அதிகம் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இதுவே புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்க வழி செய்துள்ளதாகவும் பாடசாலை மாணவர்களுக்கு தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
No comments:
Post a Comment