Thursday, April 24, 2014

"பயமாய் இருக்குது பாதர் எனக்கு குழிசை வாங்கி தாங்கோ"


பயமாய் இருக்குது பாதர் எனக்கு குழிசை வாங்கி தாங்கோ என என் மகள் தொலைபேசியில் கதைத்துக்கொண்டு இருந்ததை நான் என் காதால் கேட்டேன் என கொன்சலிற்றாவின் தாயார் நீதிமன்றில் நேற்று(23) சாட்சியம் அளித்தார் என அதிர்வு இணையம் அறிகிறது. 

பெரியகோயிலுக்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட கொன்சலிற்றாவின் வழக்கு நேற்று(23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போதே நீதவான் சிவகுமார் முன்னிலையில் தாயார் மேற்கண்டவாறு சாட்சியம் அளித்தார். அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில், பயமாய் இருக்குது பாதர் எனக்கு குழிசை வாங்கி தாங்கோ, என என் மகள் கடந்த மார்ச் மாதம் தொலைபேசியில் கதைத்துக்கொண்டதை நான் என் காதால் கேட்டேன்.

அப்போது நான் தொலைபேசியை பறித்துவிட்டு என்ன நடந்தது என்று கேட்டேன். பெரியகோயிலில் இருக்கின்ற 2 பாதர்மார் என்னை வற்புறுத்துகின்றனர். அவர்கள் இருவரும் என்னிடம் ஐ லவ் யூ சொன்னார்கள். எனக்கு இருவரும் முத்தம் தந்தனர். இவற்றை வெளியில் சொல்லக் கூடாது. சொன்னால் பின்னர் தெரியும்... என்று இருவரில் ஒருபாதர் பயமுறுத்தி உள்ளார். என எனது மகள் என்னிடம் தெரிவித்திருந்தார். அப்போது எனக்கு இலக்கம் பார்க்க தெரியாது. பாதருடனேயே பேசியதாக மகள் கூறினார். அப்போது அவரிடம் இருந்து குறித்த 2 பாதிரிமார்களுடைய இலக்கத்தையும் பெற்றிருந்தேன். மனம் சோர்வான நிலையில் சாப்பிடுவது குறைவாகவே மகள் இருந்து வந்தார்.

சம்பவநாள் நாங்கள் வீட்டில் இல்லை. பூங்காவிற்கு போவதாக தம்பியாரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வீட்டுக்கு திரும்பவில்லை. எல்லா இடமும் தேடியும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அன்று இரவு குறித்த பாதிரிமார்களுக்கு தொலைபேசி எடுத்தேன். அதில் ஒருவர் இலக்கம் தவறானது என்று கூறி தொடர்பை துண்டித்தார். மற்றையவர் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருப்பதாகவும் பின்னர் எடுப்பதாகவும் கூறி தொடர்பை துண்டித்து கொண்டார். மறுநாள் காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்தோம். அன்று மதியம் அயலில் உள்ளவர்கள் கிணற்றுக்குள் சடலம் இருப்பதைக் கூறினர். உடனேயே சென்று பார்த்தோம் அது மகளின் சடலம் என அடையாளம் கண்டு கொண்டோம்.

போன் கதைத்ததில் இருந்து பார்த்தால் குறித்த 2 பாதர் மீதும் தான் எமக்கு சந்தேகம். அவர்கள் இதுவரை எம்முடன் எவ்விதமான தொடர்பையும் ஏற்படுத்தவில்லை.எனினும் இது குறித்து ஆயர் இல்லத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் சாட்சியமளித்தார்.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6731

No comments:

Post a Comment