Tuesday, April 15, 2014

இந்த நூற்றாண்டிலும் இப்படியா ? பிணங்களை தோண்டி கறி காச்சி உண்ணும் மனிதர் !



நேற்று முன் தினம் பாக்கிஸ்தானில் கைதான நபர் தொடர்பாக, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விடையம் பாக்கிஸ்தானை மட்டும் அல்ல உலகையே அதிரவைத்துள்ளது. முகமெட் பெர்ஃமான் என்னும் 35 வயதான நபர் மற்றும் அவரது சகோதரர் இருவரும் மீண்டும் கைதாகியுள்ளார்கள். இவர்கள் நர மாமிசம்(மனிதர்களின் இறைச்சி) உண்பதாக இவர்கள் மீது சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் வழக்கு தொடுக்கப்பட்டது. பின்னர் இவர்கள் விடுதலையாகி இருந்தார்கள். தற்போது இவர்களது வீட்டில் 3 வயது குழந்தை ஒன்றின் மண்டையோடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவர்கள் வீட்டை சோதனையிட்ட சமயம் நூற்றுக்கணக்கான எலும்புகளை பொலிசார் கண்டு மிரண்டு போனார்கள். இவர்கள் மனித இறைச்சியை சமைத்து உட்கொண்டு வந்துள்ளார்கள்.

ஆனால் நல்லவேளையாக இவர்கள் இறைச்சிக்காக மனிதர்களை கொல்பவர்கள் அல்லர். ஆனால் அருகில் உள்ள மயானத்தில் புதைக்கப்படும் உடல்களை தோண்டி எடுத்துவந்து அதில் மிஞ்சியுள்ள சதைகளை வெட்டி சமையல் செய்து உட்கொண்டு வந்துள்ளார்கள். கேட்க்கவே இவ்வளவு அருவருப்பாக உள்ளது. அதுவும் இறந்து புதைக்கப்பட்ட பிணத்தை இவர்கள் எவ்வாறு சாப்பிட கற்றுக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதன் ருசியை நன்கு அறிந்தவர்கள் இவர்கள். அதிகமாக மிருகங்கள் கூட தமது இனத்தை கொன்று தாமே உட்கொள்ளும் பழக்க வழக்கத்தை கொண்டாதாக இருக்காது. ஆனால் இந்த நூற்றாண்டில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அறியப்படும்போது பெரும் அதிர்சியாக உள்ளது.

பாக்கிஸ்தான் பொலிசார் இவர்கள் இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள். சிறைச்சாலையில் மனிதர்களை இவர்கள் உட்கொள்ளாமல் இருந்தால் சரி

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6680

No comments:

Post a Comment