Wednesday, April 30, 2014

சென்னை கியூ பிரிவு பொலிசார் புலிகளுடன் தொடர்புடையவரை கைதுசெய்துள்ளது !

இலங்கை பாராளுமன்றில் மில்லியன் கணக்கில் பணத்தை கொள்ளையடித்த நபர் !
30 April, 2014 by admin
இலங்கை பாராளுமன்றில் வேலைபார்த்த அதிகாரி ஒருவர், மில்லியன் கணக்கில் பணத்தை சுருட்டிக்கொண்டு நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். புஷ்பகுமார தர்மதாச என்னும் இன் நபர் பாராளுமன்றத்தை நிர்வகிக்கும் குழுவின் பொருளாளராக இருந்துள்ளார். இவர் மேலும் ஒரு அதிகாரியுன் இணைந்து பெருந்தொகைப் பணத்தை கயாடல் செய்துள்ளார். இதேவேளை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இக் குழு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனையடுத்து இக் குழுவில் உள்ள புதிய பொருளாளர், ஆவணங்களை பார்வையிட்டவேளை பெரும் கையாடல் நடந்துள்ளதை கண்டுபிடுத்துள்ளார். ஆனால் புஷ்பகுமார நாட்டை விட்டு தப்பியோடிவிட்டார். பணத்தை கையளிக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இன் நிலையில் புஷ்பகுமாரவுகு எதிராக இலங்கை பொலிசார் இன்ரர் போல் பொலிசாரின் உதவியை நாடியுள்ளார்கள் என்று மேலும் அறியப்படுகிறது. புஷ்பகுமாரவை கைதுசெய்து தருமாறு சர்வதேச பொலிசாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை சர்வதேச பொலிசார் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6760
சென்னை கியூ பிரிவு பொலிசார் புலிகளுடன் தொடர்புடையவரை கைதுசெய்துள்ளது !
30 April, 2014 by admin
தற்போது கிடைக்கப்பெற்ற செய்திகளின் அடிப்படையில், கைதாகியுள்ள இன் நபர் பாக்கிஸ்தானின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், அவர் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை கியூ பிரிவு பொலிசார் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நபர் என்று கூறி ஒருவரை நேற்றைய தினம் (29) மாலை கைதுசெய்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. 27 வயதாகும் மொகமெட் சகீர் ஹுசைன் என்னும் இன் நபரை தாம் நேற்று இரவு கைதுசெய்ததாகவும், அவ்விடத்தை தாம் கூறவிரும்பவில்லை என்று கியூ பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள். தமக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலுக்கு அமையவே இக்கைது இடம்பெற்றுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளார்கள். குறித்த நபர் வசித்துவந்த வீட்டை கியூ பிரிவு பொலிசார் சுற்றிவளைத்துள்ளார்கள்.

இவரிடன் இருந்து 1000 ரூபா போலி தாழ்கள் இருந்ததாகவும் பொலிசார் குற்றஞ்சாட்டியுள்ளார்கள். இவரை தாம் இந்தியாவில் ஏற்கனவே தேடிவந்ததாகவும் கூறிய பொலிசார் இவர் மேல் என்ன குற்றச்சாட்டு இருக்கிறது என்பதனை தெளிவாக வெளியிடவில்லை. இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளார் என்றும், அதேவேளை இலங்கை அரசுக்கும் எதிராகச் செயல்பட்டார் என்று மட்டுமே மொட்டையாக தெரிவித்துள்ளார்கள், என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6759

No comments:

Post a Comment