திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் ஆற்றிங்கல் அருகே உள்ள மன்னாபாகம் பகுதியை சேர்ந்தவர் விஜிஸ் (வயது40). இவரது மனைவி அனுசாந்தி (35). இந்த தம்பதியின் குழந்தை சுவஸ்திகா (4). இவர்கள் 3 பேரும் விஜீசின் தாயார் ஓமணாவுடன் (67) ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
அனுசாந்தி டெக்னோ பார்க்கில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அந்த கம்பெனியில் வேலை பாக்கும் நினோ மேத்யூ(வயது 40) என்பவருக்கும் அனு சாந்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
அடிக்கடி அனுசாந்தியை தனது காரில் நினோ மேத்யூ, அவரது வீட்டில் கொண்டு விட்டுள்ளார். இதனால் அனு சாந்தியை கணவர் விஜிஸ் மற்றும் மாமியார் ஓமணா ஆகியோர் கண்டித்தனர். ஆனாலும் அனுசாந்தி தனது கள்ளத் தொடர்பை துண்டிக்க வில்லை.
இதனால் விஜிஸ், வினோ மேத்யூவை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வினோ மேத்யூ சம்பவத்தன்று கையில் கத்தியுடன் விஜிஸ் வீட்டுக்கு சென்று அவரை குத்தினார்.
இதில் ஓமணாவும், சுவஸ்திகாவும் பரிதாபமாக இறந்து போனார்கள். விஜிஸ் ஆற்றிங்கல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி ஆற்றிங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நினோ மேத்யூவை கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன் அதன் விவரம் வருமாறு:-
அனுசாந்தி கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த தனது குடும்பத்தார் அனைவரையும் தீர்த்துகட்ட எண்ணி உள்ளார். இதற்கு கள்ளக்காதலனை தூண்டி விட்டு உள்ளார். மொபைல் வாட்ஸ்அப்பில் கொலைகான திட்டத்தை போட்டு வீட்டை விட்டு எப்படி தப்பியோடுவது என்பது குறித்து அனுசாந்தி தனது கள்ளக்காதலனுக்கு ஐடியா கொடுத்துள்ளார். இதற்காக வீட்டின் படங்களையும், ஒவ்வொரு அறையையும் செல்போனில் போட்டோ எடுத்து அதை வாட்ஸ் அப் மூலம் நினோமாத்யூவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கொள்ளையர்கள் வந்து கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டதாக ஜோடித்துவிடலாம் என்று திட்டமிட்டிருந்த கள்ளக்காதலர்களின் திட்டம் நிறைவேறவில்லை.
நினோமாத்யூ ஏற்கனவே திருணமானவன் அவனுக்கு 4 வயதில் குழந்தை உள்ளது.இவனது கள்லதொடர்பை அறிந்தௌ அவனது மனைவி அவனை விட்டு சென்று தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்.
இதை தொடர்ந்து போலீசார் அனுசாந்தியையும் கைது செய்து உள்ளனர்.
http://www.dailythanthi.com/2014-04-18-Techies-used-WhatsApp-to-plot-murder-in-Kerala
No comments:
Post a Comment