Sunday, April 20, 2014

பேஸ்புக்கில் அரங்கேறிய கொலை!

பேஸ்புக் மூலம் இளம்பெண் என ஏமாற்றிய 45 வயது பெண் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள முசாபர்பூரை சேர்ந்த வினித் சிங் (22), இவருக்கும் ஜோதி என்று 45 வயது பெண்ணுக்கும் பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இப்பெண் தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய வயதை 21 என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் இப்பெண்ணின் உண்மை விவரம் தெரியவந்தைதத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அந்த இளைஞன் அப்பெண்ணை சுட்டுக்கொன்றதுடன் தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
துப்பாக்கியால் சுட்டுகொண்ட நிலையில் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இளைஞன் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல்துறை கண்காளிப்பாளரான ஹரிநாராயணாச்சாரி மிஸ்ரா கூறுகையில், வேலையில்லாத இளைஞனான வினித்துக்கும் குடும்ப வாழ்க்கையில் கடுப்பாகிப்போன அப்பெண்ணுக்கும் கடந்த 3 வருடங்களாக வலைதள தொடர்பு இருந்துள்ளது.
நீர் பாசன துறையில் வேலை செய்துவரும் அப்பெண்ணின் கணவருக்கும், அப்பெண்ணின் 21 வயது மூத்த மகளுக்கும் கூட தனது தாய் என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வினித் தன்னை அப்பெண் இருட்டில் வைத்து ஏமாற்றியதாக தொடர்ந்து உளறி வந்ததாக கூறியுள்ளார். 

No comments:

Post a Comment