Friday, April 11, 2014

அடுத்த 2 வாரங்களுக்குள் சாவகச்சேரி வரை ரயில்!!

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வடக்கிற்கான ரயில் சேவை சாவகச்சேரி வரை நீடிக்கப்படும் என நம்பகமாகத் தெரியவருகின்றது. தற்போது வடக்கிற்கான ரயில் சேவை பளை வரையே நடைபெறுகின்றது. அதற்கு அப்பால் கெடிகாமம், சாவகச்சேரி ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி வரையான ரயில் பாதைகளும் போக்குவரத்துக்குத் தயாராகிவிட்டன.

எனினும் பளைக்கும், சாவகச்சேரிக்கும் இடையிலான சில ரயில் தரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி இன்னும் பூர்த்தியாகவில்லை. சாவகச்சேரி வரையான சேவை விஸ்தரிப்புக்குப் பின்னர் காலகதியில் அந்த நிலையங்கள் அமைக்கப்படும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த பத்து நாள்களுக்குள் சாவகச்சேரி வரை ரயில் சேவையை நடத்தக் கூடிய தயார் நிலையில் அத்தடம் இலங்கை ரயில்வேத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. பெரும்பாலும் இந்த மாத முடிவுக்கு முன்னர் ரயில் சேவை சாவகச்சேரி வரை நீடிக்கப்பட்டு விடும் என்பதை உறுதிசெய்ய முடிந்தது. Chava-Rrain

No comments:

Post a Comment