Wednesday, March 26, 2014

தந்தையை கொலைகாரராக்கிய மகளின் காமவெறி!!குடும்பத்தை,ஜாதியை சாவடித்த காமவெறி கொலைக்கு காரணி!

மகளை எமலோகம் அனுப்பிய தந்தை! எல்லாம் ஜாதிவெறி
[ புதன்கிழமை, 26 மார்ச் 2014, 12:59.15 PM GMT +05:30 ]
ஜாதிமாறி திருமணம் செய்து கொண்டதால் பெற்ற மகளையே தந்தை கொலை செய்துள்ளார்.
ஹைதராபாத் மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் ஹரிபாபு, விவசாயத் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி சம்ராஜ்யம், குடும்பத்தை கவனித்து வருகிறார். இவரது மகள் தீப்தி (26), தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் தன்னுடன் வேலை பார்த்த கிரண் குமார் என்பவரை 2001ம் ஆண்டிலிருந்து காதலித்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தீப்தியின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தீப்தி - கிரண்குமார் காதல் ஜோடி கடந்த 21ம் திகதி ஹைதராபாத்தில் உள்ள ஆர்யசமாஜத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தீப்தியை சந்தித்து அவர்களுடைய திருமணத்தை ஏற்றுக் கொண்டதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர். அத்துடன் குண்டூரில் சில சடங்குகள் செய்ய வேண்டும் என்று கூறி புதுமண தம்பதியரை கடந்த 23ம் திகதி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அங்கிருந்து தீப்தியை மட்டும் தனியாக அழைத்துச் சென்ற அவர்கள், அவரது கணவரையும், நண்பர்களையும் விருந்தினர் இல்லத்தில் தங்கியிருக்குமாறு கூறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை கிரண்குமார் மனைவியை அவரது கைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் எந்தவித பதிலும் இல்லை.
இதனால் பொலிசிற்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து விரைந்து வந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, தீப்தி கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் பெற்றோரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், தீப்தி கம்மா சமுதாயத்தை சார்ந்தவர், கிரண்குமார் கபு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதுதான் கொலைக்கு காரணமாகிவிட்டது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய தீப்தியின் தந்தை, மகளின் கொலைக்கு தான் மட்டுமே காரணம் என்று கூறி கண்ணீர் விட்டுள்ளார்.
ஆனால் தந்தையால் மட்டுமே பெண்ணை கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று சந்தேகமடைந்த பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
http://www.newindianews.com/view.php?22UMM203lOo4e2DmKcb240Mdd304obc3mDBe43OlR0226AU3

No comments:

Post a Comment