Monday, August 12, 2013

காதலியுடன் கோயிலுக்கு சென்ற கணவரை அடித்து உதைத்த மனைவி: தெல்லிப்பழையில் சம்பவம்!

காதலியுடன் கோயிலுக்கு சென்ற நான்கு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவரை மனைவி புரட்டி எடுத்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தெல்லிப்பழையிலுள்ள ஆலயம் ஒன்றில் கடந்த ஆடிச் செவ்வாய் தினத்தன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் குடும்பத்தர் திருமணமாகி நான்கு வயதுள்ள ஆண் குழந்தைக்கு தகப்பனாக உள்ளார்.
இந்நிலையில் இவர் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணொருவருடன் காதலில் வீழ்ந்துள்ளார். இதனை அறிந்த மனைவி கணவனுடன் சண்டை பிடித்துக் கொண்டு தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனை சாதகமாக பயன்படுத்திய கணவன் தனது காதலியுடன் அங்குமிங்கும் காரில் சுற்றித் திரிந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று கோயிலுக்குள் இருவரும் இருப்பதாக மனைவிக்கு தகவல் கிடைத்ததும் கையும் களவுமாக இருவரையும் பிடித்துள்ளார்.
இதன்போது கோபமுற்ற மனைவி கணவனது கன்னத்தில் கடுமையாக அறைந்துள்ளார். அத்தோடு குறித்த பெண்ணையும் நையப்புடைத்துள்ளார்.
இதன்பின்னர் இது தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
காதலிக்கு தற்பாதுகாப்பாளர் ஒருவர் மேற்குறித்த குடும்பத்தர் நியமித்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment