| திரு வல்லிபுரம் நித்தியசிங்கம் (நித்தி) மலர்வு : 7 யூலை 1929 — உதிர்வு : 4 பெப்ரவரி 2013 http://notice.lankasri.com/ta/obituary-20130205205540.html யாழ்.கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் நித்தியசிங்கம் அவர்கள் 04-02-2013 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் செல்லாச்சி தம்பதியின் இளைய மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் மீனாட்சி தம்பதியின் அன்பு மருமகனும், யோகதேவி அவர்களின் பாசமிகு கணவரும், ஜெயக்குமார்(ஜேர்மனி), ஜெயந்திரன்(சுவிஸ்), கிருபாகரன்(ஹொலன்ட்), காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, அப்புத்துரை, சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும், விஜயதேவி(ஜேர்மனி), தனுசா(சுவிஸ்), சங்கீதா(ஹொலன்ட்) ஆகியோரின் அன்பு மாமனாரும், உசேனி(ஜேர்மனி), அட்சயன், மாதங்கி(சுவிஸ்), ஆகிர்த்தியா, ஆருயன், அனுமிதா(ஹொலன்ட்) ஆகியோரின் பாசமிகு பாட்டனும், விநாயகமூர்த்தி, றோகினிதேவி, யோகமலர், காலஞ்சென்றவர்களான யோகரத்தினம், பூபாலசுந்தரமூர்த்தி, சுகுமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-02-2013 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். | ||||||||||||||||||||||
| தகவல் | ||||||||||||||||||||||
மனைவி, பிள்ளைகள்.
| ||||||||||||||||||||||
Wednesday, February 6, 2013
திரு வல்லிபுரம் நித்தியசிங்கம்(நித்தி)மரண அறிவித்தல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment