Thursday, February 14, 2013

பிரான்ஸ் கற்பழிப்பு வழக்கு பெரும் குழப்பம் !


பிரான்சில் மார்சேல் நகரில் தொடர் கற்பழிப்பில் ஈடுபட்டவரின் மரபணுவை, பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் இருந்து பொலிசார் எடுத்துள்ளார்கள். குறிப்பிட்ட நபரையும் பிரெஞ்சுப் பொலிசார் கைதுசெய்துள்ளார்கள்.... ஆனால்.. சிக்கல் வேறு ரூபத்தில் அல்லவா தாண்டவம் ஆடுகிறது ! சரி வாருங்கள் மேட்டருக்குப் போகலாம் !

பிரான்சில் மார்சேல் நகரில் தொடர் கற்பழிப்பில் ஈடுபட்டவரின் மரபணு சோதனை அறிக்கையின்படி பிடிப்பட்டவர் இரட்டையராக இருப்பதால் காவல்துறையினர் குழம்பியுள்ளனர். இருவரையும் கைது செய்து விசாரித்தபொழுது இருவரும் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை. இதில் மாபெரும் பிரச்சனை என்னவென்றால்... யார் குற்றவாளி என்பதுதான் !

இருவரில் எவர் என்பதை அறிய நுட்பமான மரபணு சோதனை செய்யலாம் என்றால் இதற்கு ஒரு மில்லியன் யூரோ செலவாகும் என்பதால் பொலிசார் திகைத்துப் போய் உள்ளனர். எல்வின் யோகன் என்ற 24 வயது இரட்டையரின் மரபணு, கற்பழிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் தடயங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது. இருவரின் மரபணுவும் ஒன்றுபோல் இருப்பதால் இந்தச்சோதனை மூலமாக இருவரில் எவர் குற்றவாளி என்பதை அறிய முடியவில்லை என்று விசாரணை அதிகாரி இம்மானுவேல் கீல் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவருமே வேலையில்லாமல் சுற்றித் திரிகின்றனர். 

அவ்வப்போது ஓட்டுனர் வேலை பார்த்தபொழுது கடந்த செப்ரெம்பர் முதல் ஜனவரிக்குள் ஆறு பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. ஒரு பேருந்தின் கண்காணிப்புக் கமெராவிலும், ஒரு அலைபேசியிலும் எடுத்தப்படங்களில் இந்த இரட்டையரின் முறைகேடான செயல் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் இவர்களை அடையாளம் காட்டினாலும் இருவரையும் சேர்த்து பார்த்தால் குழம்பிவிடுகின்றனர். இதனால் பொலிசார் பெரிதும் குழம்பியுள்ளார்கள். அது சரி 1 மில்லியன் யூரோக்களை கொடுத்து, மிகவும் நுட்ப்பமான மரபணுப் பரிசோதனை நிகழ்த்தினால் கூட, 100 வீதம் துல்லியமாக குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாது என்று சில ஆராட்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment