Friday, October 5, 2012

குருவை போற்றும் நாள் இன்றாம்!!


என்ன கொடுமை என்றால் வெள்ளையன் கழிவு தொட்டியை கொண்டாடி விழா எடுத்தால் அதை தலைமேல் சுமந்து தொண்டாற்றும் நம் இனம் நம் மூதாதைகளால் கொண்டடி நமக்காக விட்டுச்சென்ற விழாக்களை மூட நம்பிக்கை,பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்று ஓரம் கட்டி பெருமை வெறு கொள்கிறார்கள்.வெள்ளையனின் அவனது நாட்டு வெட்பதட்ப சூழலுக்கு போட்ட உடைகளை நாம் வியர்க்க வியக்க போட்டு பெருமை கொள்வதோடு எமது சூழலுக்கேற்ற உடை போடுவோரை பட்டிக்காடு என்றும் படிக்காத கூட்டம் என்றும் சொல்லி தங்கிலீசும் பேசி வெட்கமின்றி பெருமை கொள்கிறோம்.அவ்வாறே குரு,அப்பா,அம்மா என்று நம் முன்னோர் வணங்கிய முறை போய் பெயர் சொல்லிக்கூப்பிடும் ,அவர்கள் சொற்களை மீறும் நாம் வெள்ளையன் கொண்டாடும் ஒரே காரணத்தால் அன்னையர் தினம்,தந்தையர் தினம்,ஆசிரியர் தினம் ,காதலர் தினம் என்று கொண்டாடி தண்ணி போட்டு மகிழ்கிறோம்.அதை இட்டு பெருமை வெறு!!நாம் எங்கே போகிறோம்?????கை குளுக்குவதால் நோய் தோற்றும்,தப்பாக நடக்க சம்மதம் பெறவும்,சம்மதத்தை அறியவும் அதையே உபயோகிக்கலாம்!வணக்கம் ஒரு சிறந்த முறை,அதில் என்ன தீமை கண்டான் தமிழன்!!தழுவுவதையே விரும்புகிறான்,தன் மனைவியை,மகளை அடுத்தவன் தழுவினால் தவிக்கிறான்!!முட்டாள் தினம் இவனுக்கு மட்டுமே உரியது!குரு தாய்,தந்தைக்கு அடுத்து உயர் நிலையில் இருப்பவர்,அவருக்கு நன்றி சொல்ல ஒரு தினமா??அவ்வளவுக்கு இதயம் சுருங்கி விட்டதா??

No comments:

Post a Comment