கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா, மும்பையில் தாய் சரிகாவுடன் வசிக்கிறார். விவான் பாலிவுட்டில் விஷால் பரத்வாஜின் “சாத் கூன் மாஃப்” என்ற படத்தில் நடித்துள்ளார். இதுநாள் வரை இவர்களின் நட்பு வெளிச்சத்துக்கு வராமல் இருந்தது. சமீபத்தில் அவர்கள் இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களுக்கு சென்றதையடுத்து இவர்களுக்கு இடையிலான தொடர்பு அம்பலமானது. அக்ஷரா எங்கு சென்றாலும் அவருடனே விவான் இருப்பார் என்று பாலிவுட் வட்டாரம் தொடர்படியாக சில தகவல்களை தந்துகொண்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் அக்ஷராவுக்கு நடந்த பிறந்த நாள் விழாவில் விவான் கலந்துகொண்டார். இதே விழாவில் கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசனும் பங்கேற்றார். நெருங்கிய நண்பர்கள் தவிர அக்ஷரா, விவான் நட்பு வேறு யாருக்கும் தெரியாதாம். இதுபற்றி விவான் கூறும்போது, அக்ஷராவுடன் நான் டேட்டிங் செய்யவில்லை. அவரை சிறுவயதிலிருந்தே எனக்கு தெரியும். இருவரும் நட்பாக பழகி வருகிறோம். இதேபோல் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். என் வாழ்வில் இதுவரை எந்த காதலியும் கிடையாது. நான் தனி ஆளாகத்தான் இருக்கிறேன் என்றார். http://cinema.lankasri.com/view.php?22JnLbc4LH24eH5a303hOIdd2OhF20Ga52e4FLBcb2nJ12 |
Wednesday, July 18, 2012
பாலிவுட் நடிகருடன் கமல் இளைய மகளுக்கு காதலா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment