Sunday, May 20, 2012

சிறுவனுக்கு அதிர்ஷடத்தை தேடிக் கொடுத்த பிறந்த இடத்தின் வரைபடம்!



 [ Saturday, 19 May 2012, 12:14.21 PM. ]
நாம் எதிர்பாராத சூழ்நிலையில் கிடைப்பது தான் அதிர்ஷ்டம் என்பதாகும். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹெல்மாண்ட் பகுதியை சேர்ந்த ஒரு சிறுவனுக்கு அவனுடைய மார்பில் காணப்பட்ட பிறந்த இடம் குறித்த வரைபடம் (மேப்) அவனுக்கு அதிர்ஷ்டத்தை தேடி கொடுத்துள்ளது.
கிரான் என்ற அந்த 9 வயது சிறுவன் படிப்பதற்கு வசதி இல்லாததால் பிச்சை எடுத்து வந்தான். இவனது அவலநிலை குறித்த தகவல் வெளியானது.
இதனையடுத்து அவனுக்கு தேவையான உதவிகளை செய்ய அங்குள்ள வர்த்தக கழகம் முன்வந்துள்ளது. சிறுவன் படிப்பதற்கும், மற்ற செலவுக்கும் மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் நிதி உதவியை வழங்குகிறார்கள். அவன் பள்ளிக்கல்வியை முடிக்கும் வரையில் இந்த உதவி கிடைக்கும்.

No comments:

Post a Comment