Sunday, February 12, 2012

விட்னி ஹாஸ்டன் : மைக்கேல் ஜேக்சனை போன்று உலகை உலுக்கியுள்ள இன்னுமொரு மரணம் !


அமெரிக்காவின் மிக பிரபலமான பாப் பாடகரும் நடிகையுமான விட்னி ஹாஸ்டன் 'Witney Houston', songs!

அமெரிக்காவின் மிக பிரபலமான பாப் பாடகரும் நடிகையுமான விட்னி ஹாஸ்டன் 'Witney Houston', நேற்று திடீரென மரணமடைந்த செய்தி மேற்கத்தேய இசை உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் கிரம்மி விருதுகள் வழங்கும் விழா நடைபெறவிருந்த நிலையில் அதற்கு முதல் நாளான நேற்று,  பெவெர்லி ஹில்டன் விடுதியில் தங்கியிருந்த ஹாஸ்டன், அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது சடலம் குளியறையிலிருந்து மீட்க்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.  இறக்கும் போது அவருக்கு வயது 48.

உலக புகழ் பெற்ற, விற்பனையில் சாதனை படைத்த 170m பாடல் அல்பத்தின் சொந்தக்காரர், ஆறு கிராமி விருதுகள் வென்றவர், அவற்றில் மூன்று சிறந்த Pop Vocal  Performance க்காக அவருக்கு கிடைக்கப்பெற்றது.

30 பில்போர்ட் விருதுகள், 22 அமெரிக்கன் மியூசிக் அவார்ட் விருதுகளுக்கும் விட்னி ஹாஸ்டனின் தனித்திறமைக்காக தேடி வந்தவை. அவருடைய 'I Will Always Love You' இசை ஆல்பம்  இன்றுவரை விற்றுக்கொண்டிருக்கிறது. இத்தனை புகழுக்கும் சொந்தக்காரராக இருந்தும் அண்மைக்காலமாக போதை வஸ்துக்கு கடுமையாக  அடிமையாகியிருந்தார். இதனால் திருமண உறவிலும் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து பெற்றார்.

 தற்போது அவருடைய மரணத்திற்கும், தீவிர குடிப்பழக்கம் மற்றும் போதை வஸ்து பழக்கம் என்பனவே காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. எப்படி இருந்த போதும், விட்ஸனின் மரணத்திற்கு ரிஹானா, டொல்லி பார்டொன், ராப் மோகுல் உட்பட பலர் தமது அதிர்ச்சியையும், இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.

பாப் பாடகர் மைக்கேல் ஜேக்சன் போன்று, இவருடைய மரணமும் பாப் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கிராமி விருதுகள் வழங்கும் விழா இவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வாகவே தொடங்கப்படும் என பலரும் எதிர்பார்க்கிறார்கள்.







பாடகியின் பரிதாப மரணம் !
12 February, 2012 by admin
உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகி விட்னி கியூஸ்டன் இன்று காலமானார் ! அவருக்கு வயது 48 ஆகும். அமெரிக்க பாடகியான விட்னி கியூஸ்டன் அவர்கள் பாடி காட் என்னும் திரைப்படத்தில் நடத்ததன் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகையாகவும் திகழ்ந்தார். சுமார் 6 தடவை கிராமி விருதையும், அமெரிக்க விருதுகள் பலதையும் தட்டிச் சென்றவர் இவர். பாடி காட் (BODY GUARD)என்னும் படத்தில் ஐ ஆல்வேஸ் லவ் யூ(I always love you) என்னும் உலகப் பிரசித்திபெற்ற பாடலைப் பாடியவர். இனிமையான குரலால் அனைவரையும் கவர்ந்த இவர் சமீபகாலமாக போதைப் பொருட்களுக்கு அடிமையாகியிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இன்றைய தினம் அதிகாலை, அமெரிக்க லாஸேஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆடம்பர விடுதி ஒன்றில் இவர் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இரவு, தனது நண்பர்களுடன் சேர்ந்து, மதுபாணங்கள் அருந்திவிட்டு அவர் தனது அறைக்குச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் அவருக்கு ஒரு பாடல் ரக்கோடிங் இருந்திருக்கிறது. அதற்காக அவரது உதவியாளர் அவரை அழைத்துச் செல்ல விடுதிக்குச் சென்றவேளை அவர் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். போதை, மற்றும் மதுப் பழக்கவழக்கங்களுக்கு ஆளாகியிருந்த ஒரு பாடகியின் பரிதாபமான மரணம் அமெரிக்காவை உலுக்கியுள்ளது. அவர் பாடல் அல்பங்கள் அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் சுமார் 170 மில்லியன் பிரதிகளை விற்று சாதனை படைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.










No comments:

Post a Comment