விளையாட்டு வீரர்கள் அனைவரும் தாம் விரும்பிய விளையாட்டின் மூலம் சாதனை படைப்பதற்கு எதிர்பார்ப்பார்கள். ஆனால் பிரித்தானியாவை சேர்ந்த சொக் தோர்ன்ரன் என்ற குதிரை பந்தய வீரரின் வாழ்வில் எதிர்பாராத சாதனையே இடம்பெற்றுள்ளது. 33 வயதை உடைய இவர் தனது பதினாறாவது வயதில் இப்பந்தயத்தில் இணைந்ததிலிருந்து இதுவரை 367 தடவைகள் குதிரையில் இருந்து விழுந்துள்ளார். இதில் 42 தடவைகள் பலமான காயங்களுக்கு உட்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கால் முறிவு, சிறுநீரகப்பாதிப்பு, ஏனைய எலும்பு முறிவு, பல் உடைவு என்பன அடங்குவதுடன் கடந்த 2009ம் ஆண்டில் மட்டும் இவருடைய உதட்டில் 22 தையல்கள் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், இத்தனை தடவைகள் விழுந்தும் பல காயங்களுக்கு உட்பட்டும் தாம் உயிரோடு இருப்பது தனது அதிஷ்டம் என குறிப்பிட்டுள்ளார். |
No comments:
Post a Comment