வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்தால் கல்லூரி வாசலில் வைத்து மகளை கத்தியால் வெட்டிய தந்தை!! |
நிச்சயதார்த்தம் முடிந்தும், திருமணத்திற்கு சம்மதிக்காமல் காதலனை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறிய இன்ஜினியரிங் கல்லூரி மாணவியை, கல்லூரி வாசலிலேயே அவரது தந்தை வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த வளையமாதேவியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி; எலக்ட்ரீஷியன். இவரது மகள் ஞானவள்ளி, 21; சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக இன்ஜினியரிங் கல்லூரியில் கட்டடவியல் பிரிவில், மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சிதம்பரம் லால்கான் தெருவில், உறவினர் வீட்டில் தங்கி, கல்லூரிக்குச் சென்று வந்தார். ஞானவள்ளி பக்கத்து ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார். இதைக் கண்டித்த சுந்தரமூர்த்தி, தன் மகள் ஞானவள்ளிக்கு வேறு இடத்தில் வரன் பார்த்து நிச்சயம் செய்துள்ளார். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகும் திருமணத்திற்கு சம்மதிக்காத ஞானவள்ளி, தன் காதலனை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார். ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி, இன்ஜினியரிங் கல்லூரி வகுப்பறைகளில் தன் மகளை நேற்று தேடினார். அங்கு இல்லாததால், கல்லூரியில் இருந்து வெளியில் வந்தார். நுழைவு வாயில் அருகே வந்தபோது, எதிரில் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு கல்லூரிக்குள் நுழைந்த மகளைப் பார்த்ததும், தான் கொண்டு வந்த கத்தியால் ஞானவள்ளியின் கழுத்தில் வெட்டினார். மாணவி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்ததை பார்த்த சக கல்லூரி மாணவ, மாணவியர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்தவர்கள் சுந்தரமூர்த்தியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாமலை நகர் போலீசார், மகளை வெட்டிக் கொலை செய்ய முயன்ற தந்தை சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். சுந்தரமூர்த்திக்கு மூன்று மகள்கள் உள்ளனர். முதல் மகளான ஞானவள்ளி வேறு சமூகத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார். முதல் பெண் காதல் திருமணம் செய்து கொண்டால், அடுத்துள்ள இரண்டு மகள்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் எனக் கூறி சுந்தரமூர்த்தி கண்டித்துள்ளார். எவ்வளவோ அறிவுரை கூறியும் ஏற்க மறுத்ததால், வேறு வழியின்றி மகளை கொலை செய்யத் துணிந்து விட்டதாக, போலீஸ் விசாரணையில் சுந்தரமூர்த்தி கூறியுள்ளார். http://newjaffna.com/fullview.php?id=OTg4MQ%3D%3D |
Tuesday, February 21, 2012
பெற்றோரை மிதிக்கும் பிள்ளைகளும் பரம்பரையாக வரும் பழக்கம் காக்க கொலையாளியாகும் பெற்றவரும்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment