பின்தங்கிய கிராமங்களில் பயணம் செய்வதற்கு பாதைகள், பாலங்கள் காணப்படுவது மிக மிக அரிது. இதனால் போக்குவரத்திற்காக மாற்று வழியை சிந்திக்கவேண்டிய கட்டாயத்தில் அப்பிரதேச மக்கள் இருப்பார்கள். அவ்வாறு சிந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட போல்வியா என்ற பிரதேச மக்கள் இரு பிரதேசங்களுக்கிடையிலுள்ள 650 அடிகள் ஆழமான பள்ளத்தாக்கை கடப்பதற்கு கயிற்றை பயன்படுத்த முடிவு செய்தார்கள். பல ஆண்டுகளாக இந்த கயிற்றின் மூலமாக பயணம் செய்யும் இங்குள்ள மக்கள் தற்போது விண்வெளி வீரர்களை விடவும் வேகமாக பயணிக்கிறார்களாம். ஒரு கரையிலிருந்து மற்றக்கரையை சென்றடைவதற்கு 30 செக்கன்களே இவர்களுக்கு தேவைப்படுகின்றது. |
No comments:
Post a Comment