எரிபொருள் விலையேற்றம், அதனைத் தொடர்ந்த ஆர்ப்பாட்டங்கள் என நாட்டு நிம்மதியற்றுக் கிடக்கின்றது. அத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் மீனவர் ஒருவர் உயிரிழப்பு என நீண்டு செல்கின்றது நாட்டில் அட்டூழியம்.இவை அனைத்தையும் கட்டுப்படுத்த அரச தரப்பால் பல பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மானிய விலையில் எரிபொருள்கள் வழங்குவது, மின்சாரம் இல்லாத பிரதேசங்களுக்கு எரிபொருள் வழங்கல் போன்றன முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவை அத்தனைக்கு மேலாக தங்காலை மீனவர் துறைமுகத்துக்கான திடீர் விஜயமொன்றை இன்று திங்கட்கிழமை மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கிருந்த மீனவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார். இதுவும் முற்படி பிரச்சினையைக் குறைப்பதற்கான ஒரு தந்திரோபாய விஜயமாகவே இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது 
.
.
. 
.
.
. 
.
. |
No comments:
Post a Comment