பிரபல நடிகை பாவனா மரணம்: யாழ் உதயனில் கண்ணீர் அஞ்சலி !
14 February, 2012 by admin-athirvu
பிரபல இந்திய நடிகை பாவனா மரணமானார் என யாழ் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடே ஆடிப்போகும் இச் செய்தி குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாக உள்ளது. பாவனாவின் படத்தை 31ம் நாள் நினைவஞ்சலிக்காக வெளியிட்டுள்ள இப் பத்திரிகை, பெயரை மட்டும் சற்று மாற்றி வெளியிட்டுள்ளது என, யாழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். உண்மையாகவே படத்தில் காணப்படும் நடிகை பாவனா இறக்கவில்லை என்று இந்தியாவில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் பணத்துக்காக இவ்வாறு காசை வாங்கிக்கொண்டு விளம்பரத்தை உதயன் பேப்பர் போட்டுள்ளதா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து உதயன் நிர்வாகத்திடம் கேட்டால், தட்டிக் கழிக்கும் தகவல்களைத் தருவதோடு மேலதிகமாக இது குறித்து தாம் பேசத்தயார் இல்லை என்று சொல்கிறார்கள். ஒரு நடிகையின் படத்தை இவ்வளவு வெளிப்படையாகப் போட்டு அவர் இறந்துள்ளதாக யாழ் உதயன் அறிவிக்குமேயானால், அவர்கள் வெளியிடும் செய்திகளை எவ்வாறு நம்புவது என யாழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நல்லவேளையாக யாழில் நடிகை பாவனாவுக்கு ரசிகர் மன்றம் இல்லை ! இருந்திருந்தால் உதயனின் நிலை கவலைக்கிடமாகத் தான் இருக்கும் !

No comments:
Post a Comment