uyarvu.com மட்டக்களப்பு பாசிக்குடாவில் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த இரு இளம் காதலர்கள் தமிழ் பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்த இவர்கள் பாசிக்குடாவில் உள்ள அமைச்சர் பசில் ராசபக்சவின் மாலு மாலு என்ற உல்லாச விடுதியில் இத்திருமணத்தை நடத்தினர். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சுற்றுலா மேம்பாட்டு பணியகம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இலங்கை விவாகப்பதிவு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, பாசிக்குடா மாலுமாலு சுற்றுலா விடுதியில் விவாகப்பதிவை வாழைச்சேனை பிறப்பு இறப்பு பதிவுகாரர் திருமதி யோகராஜா முன்னிலையில் தமிழ்ப் பதிவு புத்தகத்தில் ஒப்பமிட்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
ரஷ்யா நாட்டைச் சேர்ந்த 26 வயதுடைய ஒல்கா யூரீவ்னா கொர்பேரா  வும் அவரது 26 வயது காதலியான பிளட்மிர் அலெக்சான்றிச் இந்துஹாகோ- ர்ஸ்கி யும் இத்திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
இவ்விதம் இங்கு திருமணப் பதிவு கொண்ட ரஷ்ய தம்பதிகள் எதிர்வரம் 23 ஆம் திகதிவரை பாசிக்குடாப் பகுதியில் தேனிலவைக் கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தம்பதிகள் கருத்து தெரிவிக்கையில், இரம்மியமான பசுமை மிகுந்த இலங்கையில் நாம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதை பெரும் பாக்கியமாக கருதுவதாகத் தெரிவித்தனர்.