இணையத்தளத்துறையில் மிகப்பிரபல்யம் அடைந்து காணப்படும் தேடு இயந்திரமான கூகுள் உலக காதலர் தினத்தில் அனைத்து காதலர்களையும் சந்தோசப்படுத்தும் விதமாக அதன் முகப்பு பக்கத்தில் வெளியிடும் லோகோவை காதலர்களுக்கென விசேடமாக வெளியிட்டு அவர்களை அசர வைத்துள்ளது. கூகுளின் லோகோவானது விசேட தினங்களில் அவற்றை நினைவுபடுத்தும் பொருட்டு அத்தினங்களை பிரதிபலிக்கும் வகையில் மாற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் காதலர் தினத்தில் வெளியிடப்பட்ட லோகோ மீது அழுத்தும் போது அது விசேட காணொளி ஒன்றை ஔிபரப்பக்கூடியவாறு அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. |
No comments:
Post a Comment