Tuesday, February 21, 2012

இங்கிலாந்தில் பெண்ணாக மாறிய 5 வயது சிறுவன்!!


 நெருப்பை கலர் என்று சொல்லி பெற்றோல் நிலையத்தில் கொட்டாதவரை சரிதான்!!இங்கிலாந்தில் உள்ள லண்டனை சேர்ந்தவர் டாரென்(41). இவரது மனைவி தெரசா(32). இவர்களது மூத்த மகன் ஷாஜெரி ஜாக் ஏவெரி(5). இவர்களுக்கு அலெக்ஸ் என்ற மற்றொரு மகனும் இருக்கிறான்.
ஷாஜெரியின் 3-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அவன் தான் ஆண் அல்ல, பெண் என்பதை உணர்ந்தான். தனது பெற்றோரிடம் நான் பெண் குழந்தை என கூறி அடம்பிடித்தான்.
ஆண் குழந்தைகள் விளையாடும் பொம்மையை தூக்கி எறிந்து விட்டு பெண் குழந்தைகளுக்கான பொம்மையை எடுத்து விளையாட தொடங்கினான். அவனின் இந்த நடவடிக்கைகள் பெற்றோருக்கு அதிர்ச்சியையும், கவலையும் ஏற்படுத்தியது.
உடனே, அவனை மனோதத்துவ மருத்துவரிம் அழைத்து சென்றனர். அவனை பரிசோதித்த மருத்துவர் அவன் ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தை என அவனது மூளையும், மனதும் சொல்கிறது.
எனவே அவன் மனதளவில் பெண் குழந்தைதான் என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவன் தனது 5 வயதில் பெண்ணாக மாறினான். பெண் குழந்தைகளுக்குரிய ஆடைகள், அணிகலன்களை அணிகிறான். நீண்ட முடி வளர்த்து இருக்கிறான்.
மேலும் தற்போது அவன் படிக்கும் பள்ளியில் ஆண், பெண் இருபாலருக்கான கழிவறையை பயன்படுத்தி வருகிறான். அவனது இந்த நடவடிக்கைக்கு பெற்றோர் சம்மதித்து பெண் குழந்தையாக வளர்த்து வருகின்றனர்.

No comments:

Post a Comment