பனிப்பாறை சரிவு விபத்தில் சிக்கிய நெதர்லாந்து இளவரசர் : ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்?!
43 வயதான இளவரசர் ஜோன் ஃபிரிஸோ வருடந்தோறும், குளிர்கால சுற்றுலாவாக பனிச்சறுக்கல் விளையாட்டுக்காக குடும்பத்துடன் ஆஸ்திரியாவின் அல்ப்ஃஸ் மலைப்பகுதிக்கு விஜயம் செய்வது வழக்கம்
நெதர்லாந்து இளவரசரர் ஜோன் ஃபிரிஸோ, ஆஸ்டிரியாவில் பனிப்பாறை சரிவு (Avalanche) விபத்தில் சிக்கியதால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வருடமும், இவ்வாறு தனது குடும்பத்தினருடன் அங்கு விஜயம் மேற்கொண்டு பனிச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பனிப்பாறை சரிவு நிகழ்வு நடைபெற்றதில், சுமார் 30 மீற்றர் அகலம், 40 மீற்றர் நீளம் கொண்ட பனிக்குமிவின் கீழ் அவர் மாத்திரம் புதைந்து கொண்டுள்ளார். நல்லவேளையாக எச்சரிக்கும் அலாரம் ஒலிக்கும் கருவிகளை ஆடையில் பொருத்தியிருந்ததால் சுமார் 15 நிமிடங்களில் அவர் புதைந்து கொண்ட இடத்தை மீட்பு குழுவினர் கண்டுபிடித்து விட்டனர். உடனடியாக அவர் மீட்கப்பட்டு இன்ஸ்பிரக்கில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்ட போதும், தற்போது அக்கட்டத்தை கடந்துவிட்டதாகவு எனினும் முற்றாக உயிராபத்து நீங்கிவிடவில்லை எனவும் மருத்துவர் தரப்பில் கூறப்படுகிறது. நெதர்லாந்து மகாராணியர் பெட்ரிக்ஸின் இரண்டாவது மகனான இளவரசர் ஃபிரிஸோ 2004ம் ஆண்டு, மனித உரிமைகள் ஆர்வலர் மாபெல் விஸ் ஸ்மித்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லௌனா, சரியா எனும் இரு மகள்கள் உண்டு.

No comments:
Post a Comment