தந்தையர்களின் அறிவுரைகளை செவிமடுக்க நேரமில்லாத பிள்ளைகள் வாழுகின்ற இந்த கலியுகத்தில் மிகவும் பொறுமையுடன் தனது தந்தையின் படத்தை புள்ளிகளை வைத்து தத்துரூபமாக வரைந்துள்ளார் மியூஜ்வெல் என்டாரா என்ற புளோரிடாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர். இதற்காக 11in x 17in அளவினையுடைய தாளைப் பயன்படுத்திய அவர் 3.2 மில்லியன் கணக்கான மிகவும் மெல்லிய புள்ளிகளையும் தனது கைகளாலேயே வைத்து வரைந்து முடித்திருக்கின்றார். இதுபற்றி மியூஜ்வெல் கூறுகையில், புள்ளிகளை கொண்டு வரையப்படும் படங்களுக்கு தான் ஒரு ரசிகன் எனவும், ஆகவே தான் முதல் முதலாக வரையும் புள்ளிகளை கொண்ட படமாக தனது தந்தையின் உருவத்தை தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். |
No comments:
Post a Comment