ஆபாச வீடியோக்களைத் தயாரிப்போர் மற்றும் பரப்புவோருக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்க வகை செய்யும் புதிய சட்டத்திற்கு, வங்கதேச அமைச்சரவை  ஒப்புதல் அளித்துள்ளது.

வங்கதேசத்தில் சமீபத்தில், அந்நாட்டின் பிரபல நடிகைகள் இருவர் நடித்த ஆபாச வீடியோக்கள் வெளியாயின. இதையடுத்து, அந்த வீடியோ காட்சிகள் அடங்கிய, வி.சி.டி., டி.வி.டி.,க்கள் விற்பனை எகிறியது.

இந்நிலையில், ஆபாச வீடியோக்கள் தயாரிப்பு மற்றும் பரப்பலைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத்திற்கு, வங்கதேச அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

இச்சட்டத்தின்படி, ஆபாச வீடியோக்களைத் தயாரிப்போர், தயாரித்து வைத்திருப்போர், ஏற்றுமதி, இறக்குமதி செய்வோர் மற்றும் பரப்புவோருக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மூன்று லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். Embed