Saturday, January 28, 2012

சுயமான சமநிலையை கொண்டுள்ள ஒற்றைச்சில்லு வண்டி



போக்குவரத்தை இலகுவாக்கவும், விரைவுபடுத்தவும் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை இன்றும் செலுத்தத் தெரியாதவர்கள் இருக்கிறார்கள். காரணம் துவிச்சக்கர வண்டியை சமநிலைப்படுத்தும் ஆற்றல் இல்லாமையாகும்.
ஆனால் இப்பொழுது அவர்களும் செலுத்தக்கூடிய வகையில் புதிய ஒற்றைச்சில்லு வண்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத்தில் இயங்கும் வண்டியானது சுயமாகவே சமநிலை பெறும் ஆற்றலை கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இது version 2.0 ஆகும்.
1000 வாட் மின்சாரத்தில் இயங்கும் மோட்டர் பொருத்தப்பட்டள்ள இந்த வண்டிக்கு மின்சாரம் வழங்குவதற்கென விசேட லிதியம் அயரன் நனோ பொஸ்பேற் மின்கலம் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது மணிக்கு 16 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் ஆற்றலை கொண்டுள்ளதுடன் இம் மின்கலத்தை மீள்மின்னேற்றத்திற்கு உட்படுத்துவதற்கு இரண்டு மணித்தியாலங்கள் போதும் அதற்கான செலவு அமெரிக்க டொலர் பெறுமதியில் இரண்டு சதங்களாகும்.
மேலும் 13 கிலோ நிறையுடைய இவ்வண்டியின் பெறுமதி 1,499 அமெரிக்கா டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment