Friday, January 6, 2012

தமிழ் பற்றிய அறிவு !!






தமிழில் இருந்து முதலில் பிரிந்த மொழி தெலுங்கு, பின்னர் முறையே, கன்னடம், மலையாளம், ...
கன்னடத்தில் புழக்கத்தில் இருக்கும் தமிழ் சொற்கள்
தாய் - தாயி; தந்தை - தந்தெ; தம்பி - தம்ம; அக்காள் - அக்கா; தங்கை - தங்கெ; மக்கள் - மக்களு (குழந்தைகள், தம்மில் தம்ம்க்கள் - திருக்குறள்); மகவு - மகவுமகளிர் - மகளியர்; அவள் - அவளு; அவன் - அவனு; யார் - யாரு; யானை - ஆனே; அங்கே - ஆகே; இங்கே - ஈகே; மேல் - மேல்கட; கீழ் - கிளெகட; நான் - நானு; என் - நன்; நி - நீனு; அவர் - அவரு; கை - கையி; கால் - காலு; செவி - கிவி; வாய் - பாயி; மூக்கு - மூக்கு; கண் - கண்ணு; விரல் - பெரலு; நகம் - நக; பல் - பல்லு; ஓது - ஓது (படித்தல் - ஓதாமல் ஒரு நாளும் - ஒளவையார்); கேள் - கேளு; மனை - மனெ ( வீடு); போ - ஹோகு; வா - பா; பழம் - ஹன்னு ( கனி - என்ற சொற்திரிபு); உப்பு - உப்பு ( திராவிட மொழிகளில் பொதுவானது உப்பு); பார் - நோடு ( நோட்டம் என்ற் சொற்திரிபு); சின்ன - சன்ன; முந்தைய - முந்திகெ; இல்லை - இல்லெ; இருக்கு - இதெ; ஆகவில்லை - ஆகல்ல; வந்த - பந்த; பாடு - ஹாடு; நல்ல - ஒள்ளெ; மற்ற - மத்து; என்று - எந்து;

மேலும் ஆயிரத்திக்கு அதிகமான தமிழ் திரிச்சொற்கள் கன்னடத்தில் புழங்குகின்றன.

ஒன்றுக்கு மேற்பட்டவைகளில் நாம் 'கள்' சேர்போம், அவர்கள் 'களு' சேர்பார்கள்

குதிரைகள் - குதிரெகளு
நாய் - நாயிகளு
பூனைகள் - பூனெகளு

ஒன்று - ஒந்து ; இரண்டு - இரடு ; மூன்று - மூனு ; நான்கு - நாலகு ; ஐந்து - ஐது ; ஆறு - ஆறு, ஏழு - ஏழு; எட்டு - எண்டு; ஒன்பது - தொம்பது; பத்து - ஹத்து, பதினொன்று - பதவொந்து .... இருபது - இரவைத்து, முப்பது - மூவத்து, நாற்பது - நாவத்து, ஐம்பது - ஐவத்து, அறுபது- அறுவத்து, எழுபது - எப்பது , என்பது - எம்பத்து, தொன்னூறு - தொம்பத்து, நூறு - நூறு; ஆயிரம் - சாவிர .......இன்னும் பல ஆயிரக்கணக்கான சொற்கள்

மணிப்பிரவாளமும் மலையாளத் தோற்றமும்
கி.பி 9 ஆம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் மொழியின் ஒரு பகுதியாகவே மலையாளம் இருந்தது. இதன் பின்னர் தென்னாட்டில் மணிப்பிரவாளம் பெருக்கெடுத்தபோது சேர நாட்டுத் தமிழ் மாற்றம் பெறத் தொடங்கியது. பாட்டு என்னும் உள்ளூர் இலக்கிய வழக்கு ஒரு பிரிவினரிடையே பயின்று வந்தபோதிலும், சமூகத்தின் உயர் மட்டத்தினர் மத்தியில் மணிப்பிரவாள நடை பரவலாகக் கைக்கொள்ளப்பட்டது. சிறப்பாக நம்பூதிரி சமூகத்தினர் மணிப்பிரவாளத்தை வளர்ப்பதில் முன்னணியில் இருந்தனர். கேரளத்தில், 14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் லீலாதிலகம் என்னும் இலக்கண நூல், பாட்டு மரபுக்கும், மணிப்பிரவாளத்துக்கும் இடையிலுள்ள தொடர்புகளை வரையறுப்பதுடன், இசைவாகக் கலக்கக்கூடிய உள்ளூர், சமஸ்கிருதச் சொல் வகைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. மணிப்பிரவாளப் பாடல்களில் சமஸ்கிருத இலக்கணமே பின்பற்றப்படவேண்டும் என்றும் இந்த நூல் கூறுகிறது. இது, எவ்வாறு சேரநாட்டுத் தமிழில் மணிப்பிரவாளம் மூலம் சமஸ்கிருதம் படிப்படியாக ஆதிக்கம் செலுத்தியது என்பதை விளக்குகிறது. கேரளத்தில் இந்த மணிப்பிரவாள நடையில் எழுதி, இன்று கிடைக்கின்ற மிகப் பழைய நூல் வைசிக தந்திரம் என்பதாகும்.

இரத்தினம்-பவளம் என்ற நேரடிப் பொருளுடைய மணிப்பிரவாளம் என்னும் சொல், தென்னிந்தியாவில் சமஸ்கிருதமும், திராவிட மொழியொன்றும் கலந்து எழுதப்பட்ட ஒரு இலக்கிய நடையைக் குறிக்கும். மணியும், பவளமும் சேர்த்து உருவாக்கப்பட்ட மாலை போல இரண்டு மொழிகள் கலந்து உருவான இலக்கிய நடை என்பது இதன் பொருளாகும்.
சோழப் பேரரசுக் காலத்திலும் அதன் பின்னரும், இன்றைய கேரளத்தையும் உள்ளடக்கியிருந்த தமிழ் நாட்டில் ஒருசில வட்டாரங்களில் சமஸ்கிருதச் செல்வாக்கு மிகுந்திருந்தது. சமஸ்கிருத மொழி உயர்வானதாகவும், இறைவனுடைய மொழியாகவும் கற்பிக்கப்பட்ட காலம் அது. தமிழில் சமஸ்கிருதத்தைக் கலந்து எழுதுவது உயர் நடையாக அவ்வட்டாரங்களில் எண்ணப்பட்டது. ஆழ்வார்களுக்குப் பின்னர், அவர்களுடைய நூல்களுக்கு உரை எழுதிய இராமானுஜருடைய ஆக்கங்கள் மணிப்பிரவாள நடையிலேயே அமைந்திருந்தன. சோழர்காலத்தில் சமஸ்கிருதத்தின் வழி புகுந்த சமயக் கருத்துருக்களும், தமிழில் எழுந்த சமஸ்கிருதத் தழுவல் நூல்களும் இத்தகைய போக்குக்கு வாய்ப்பாக அமைந்தன

அன்றைய சேர நாட்டில், மணிப்பிரவாளத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால் சேர நாட்டுத் தமிழ், இன்று மலையாளம் என அழைக்கப்படும் புதிய மொழியாக மாறிவிட்டது.மலையாளம் என்ற சொல்லுக்கு 'மலை மற்றும் கடல் சூழ்ந்த' என்று பொருள். மலை + ஆளம்(கடல்) என்பதே மலையாளமாக ஆனது என சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். முதலில் இந்த சொல் மலைகளுக்கும் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை குறிக்க பயன்பட்டு பின்னர் அந்த நிலப்பகுதியில் பேசப்பட்ட மொழிக்கும் பெயராயிற்று என்று கருதப்படுகிறது.


மேற்கோள்
தமிழ் இலக்கிய வரலாறு, மு. வரதராசன்,11ஆம் பதிப்பு. பக்கம் 19-20 





சூரியன் மேட இராசியில் பயணம் செய்யும்போது நடைபெறும் மாதம் சித்திரையாகும். இவ்வாறே அடுத்தடுத்த ஒவ்வொரு இராசியிலும் சூரியன் பயணம் செய்யும்போது 12 மாதங்களும் ஏற்படுகின்றன. தமிழ் மாதங்களின் பெயர்களும், அந்தந்த மாதங்களில் சூரியன் பயணம் செய்யும் இராசிகளும் 
மாதம் ---- -=செந்தமிழ்பெயர்- இராசி 
1 சித்திரை - மேழம் - மேடம்
2 வைகாசி --விடை- இடபம்
3 ஆனி - ஆடவை- மிதுனம்
4 ஆடி - கடகம்- கர்க்கடகம்
5 ஆவணி -மடங்கல்- சிம்மம்
6 புரட்டாசி - கன்னி- கன்னி
7 ஐப்பசி - துலை- துலாம்
8 கார்த்திகை - நளி-விருச்சிகம்
9 மார்கழி -சிலை- தனுசு
10 தை - சுறவம்- மகரம்
11 மாசி - கும்பம்- கும்பம்
12 பங்குனி - மீனம்- மீனம்

http://www.chennaiiq.com/astrology/tamil_calendar.asp
http://thirutamil.blogspot.com/2009/12/2041-2010.html
http://ta.wikipedia.org/wiki/தமிழ்_மாதங்கள்

தமிழ் மாதங்கள் கிழமைகளின் தனித் தமிழ்ப் பெயர்கள்
வழக்குச்சொல் -தனித்தமிழ்
தை - சுறவம்
மாசி - கும்பம்
பங்குனி - மீனம்
சித்திரை - மேழம்
வைகாசி - விடை
ஆனி - இரட்டை
ஆடி - கடகம்
ஆவணி - மடங்கல்
புரட்டாசி - கன்னி
ஐப்பசி - துலை
கார்த்திகை - நளி
மார்கழி - சிலை



பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! அந்த பதினாறும் எவை?
௧. கல்வி
௨. அறிவு
௩. ஆயுள்
௪. ஆற்றல்
௫. இளமை
௬. துணிவு
௭. பெருமை
௮. பொன்
௯. பொருள்
௧0. புகழ்
௧௧. நிலம்
௧௨. நன்மக்கள்
௧௩. நல்லொழுக்கம்
௧௪. நோயின்மை
௧௫. முயற்சி
௧௬. வெற்றி

----------------------------------------------------
கலையாத கல்வி
கபடட்ற நட்பு
குறையாத வயது
குன்றாத வளமை
போகாத இளமை
பரவசமான பக்தி
பிணியற்ற உடல்
சலியாத மனம்

அன்பான துணை
தவறாத சந்தானம்
தாழாத கீர்த்தி
மாறாத வார்த்தை
தடையற்ற கொடை
தொலையாத நிதி
கோணாத கோல்
துன்பமில்லா வாழ்வு



ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை? 
1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்); 
2. எழுத்தாற்றல் (லிபிதம்); 
3. கணிதம்; 
4. மறைநூல் (வேதம்); 
5. தொன்மம் (புராணம்); 
6. இலக்கணம் (வியாகரணம்); 
7. நயனூல் (நீதி சாத்திரம்); 
8. கணியம் (சோதிட சாத்திரம்); 
9. அறநூல் (தரும சாத்திரம்); 
10. ஓகநூல் (யோக சாத்திரம்); 
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்); 
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்); 
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்); 
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்); 
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்); 
16. மறவனப்பு (இதிகாசம்); 
17. வனப்பு; 
18. அணிநூல் (அலங்காரம்); 
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்; 
21. நடம்; 
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்); 
23. யாழ் (வீணை); 
24. குழல்; 
25. மதங்கம் (மிருதங்கம்); 
26. தாளம்; 
27. விற்பயிற்சி (அத்திரவித்தை); 
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை); 
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை); 
30. யானையேற்றம் (கச பரீட்சை); 
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை); 
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை); 
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை); 
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்); 
35. மல்லம் (மல்ல யுத்தம்); 
36. கவர்ச்சி (ஆகருடணம்); 
37. ஓட்டுகை (உச்சாடணம்); 
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்); 
39. காமநூல் (மதன சாத்திரம்); 
40. மயக்குநூல் (மோகனம்); 
41. வசியம் (வசீகரணம்); 
42. இதளியம் (ரசவாதம்); 
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்); 
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்); 
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்); 
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்); 
47. கலுழம் (காருடம்); 
48. இழப்பறிகை (நட்டம்); 
49. மறைத்ததையறிதல் (முஷ்டி); 
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்); 
51. வான்செலவு (ஆகாய கமனம்); 
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்); 
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்); 
54. மாயச்செய்கை (இந்திரசாலம்); 
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்); 
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்); 
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்); 
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்); 
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்); 
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்); 
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்); 
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்); 
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்); 
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)



தமிழின் "க' என்ற எழுத்து வரி மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப் பாடச்சொல்ல, காளமேகம் காண்பவர் ஆச்சர்யப்பட, பாடலை அருவியெனக் கொட்டுகிறார்.
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.

(கூகை - ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்).

அதே போல 'த' எனும் எழுத்து வரிசை மட்டும் கொண்ட பாடலை ஒருவர் பாடச் சொல்கிறார். கார்மேகமானது கொட்டும் மழையைப் போல பாடலைக் கொட்டுகின்றார் காளமேகம்.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?

தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?) என்னே அழகிய விதத்தில் பாடியுள்ளார்?!

கிரந்த எழுத்துக்கள்(ஜ,ஸ்,க்ஷ், ஹ்,ஷ,ஸ்ரீ):- இதுவும் பிராமி எழுத்துக்களில் இருந்நு உருவாகியது. தமிழ், மலையாளம் மற்றும் சிங்கள எழுத்துக்களில் இதனுடைய ஆதிக்கம் அதிகம். கி.பி 6 ஆம் நூற்றாண்டிலிருந்து - 12 நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இம்மொழிகளில் இந்த ஊடுருவல் ஏற்பட்டது


பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்.

(i) பேதை (Pethai):
Girl between the ages of 5 to 8; 
மகளிர்பருவம் ஏழனுள் 5 முதல் 8 வயதுவரையுள்ள பெண். 

(ii) பெதும்பை (Pethumpai):
Girl between the ages of 9 and 10; 
9 முதல் 10 வயதுவரையுள்ள பெண்.

(iii) மங்கை (Mangai):
A girl between 11 and 14 years; 
11 முதல் 14 வயது வரை உள்ள பெண்.

(iv) மடந்தை (Madanthai):
Woman between the ages of 15 and 18; 
மகளிர்பருவம் ஏழனுள் 15 முதல் 18 வயதுவரை யுள்ள பருவத்துப் பெண்.

(v) அரிவை (Arivai):
Woman between the age of 19 and 24; 
19 வயதுமுதல் 24 வயதிற்குட்பட்ட பெண். 

(vi) தெரிவை (Therivai):
Woman between 25 and 29 years of age; 
25 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட பெண். 

(vii) பேரிளம்பெண் (Perilampenn):
Woman between the ages of 30 and 36; 
எழுவகைப் பருவமகளிருள் 30 வயதுக்கு மேல் 36 வயதுவரையுள்ள பெண்.
> Tamil Literature Reference:
'அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காதல்
நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’ 
- பன். பாட். 220

‘பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.’ 

ஆண்களின் பருவம்
பாலன், 1 வயதுமுதல் 7 வயதிற்குட்பட்ட ஆண் (Balan, 1-7 years).

மீளி, 8 வயதுமுதல் 10 வயதிற்குட்பட்ட ஆண் (Meeli, 8 - 10 years).
மறவோன், 11 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட ஆண் (Maravon, 11 to 14 years) 
திறவோன், 15 வயது (Thiravon, 15 years)
விடலை, 16 வயது (Vidalai, 16 years).
காளை 17 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண் (Kalai, 17 to 30 years )
முதுமகன், 30 வயதுக்கு மேல் (Mudhumagan, after 30 years)

Tamil Literature Reference:

‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’ 
’’ 228
‘பாலன் யாண்டே ஏழ்என மொழிப.’ 
’’ 229
‘மீளி யாண்டே பத்துஇயை காறும்.’ 
’’ 230

‘மறவோன் யாண்டே பதினான் காகும்.’ 
’’ 231

‘திறலோன் யாண்டே பதினைந்து ஆகும்.’ 
’’ 232

‘பதினாறு எல்லை காளைக்கு யாண்டே.’ 
’’ 233

‘அத்திறம் இறந்த முப்பதின் காறும்
விடலைக்கு ஆகும்; மிகினே முதுமகன்.’ 
’’ 234

‘நீடிய நாற்பத் தெட்டின் அளவும்
ஆடவர்க்கு உலாப்புறம் உரித்து என மொழிப.’ 
’’ 235

சாப்பிடுவது குறித்து தமிழில் எத்தனை நுட்பமான வார்த்தைகள்?
அருந்துதல் =மிகச்சிறிய அளவில் உட்கொள்ளுதல் (மருந்து)
உண்ணல =பசி தீர உட் கொள்ளல்
உறிஞ்சல் =வாயைக் குவித்து நீரியல் பண்டங்களை இழுத்தல் 
குடித்தல் =சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்(கஞ்சி)
தின்னல் =சுவைக்காக ஓரளவு தின்னுதல்(முறுக்கு)
துய்த்தல் =சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளல்
பருகல் =நீரியல் பண்டங்களை சிறிது சிறிதாகக் குடித்தல்
விழுங்கல் =பல்லிற்கும் நாவிற்கும் வேலையின்றி தொண்டை வழி உட்கொள்ளல் (மாத்திரை)






நம்மை பெற்றவர்களை அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம் .அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு?அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன?

அ-உயிரெழுத்து.
ம்-மெய்யெழுத்து.
மா-உயிர் மெய்யெழுத்து.

அதே போல தான் அப்பா.

தன் குழந்தைக்கு தன்னுடைய வித்தாகிய உயிரை கொடுப்பவர் தந்தை.தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண்,காது,மூக்கு,உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய்.இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை.எந்த மொழியிலும் அப்பா,அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.நமது தமிழ் மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளன.



 அதே போல், சங்க காலத்தில் என் தம்பி , என் சகோதரன் , என் அம்மா என்றில்லாமல், எனக்கு அம்மா, எனக்குத் தம்பி (தம் +பின்) எனக்கு சகோதரன் என்றே வழங்கப் பட்டது. 

No comments:

Post a Comment