மண்ணில் : 25 யூன் 1967 — விண்ணில் : 22 சனவரி 2012
(B.com, M.A, Dip.IN.Pds., Dip. In.Mgt. - முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி மகாசங்கம் - உடுவில்)
வங்கியடி, இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா காசிவேந்தன் அவர்கள் 22-01-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், நடராசா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், புஸ்பலோஜினி(முகாமையாளர் சமுர்த்தி வங்கிச் சங்கம் - சுன்னாகம்) அவர்களின் அன்புக் கணவரும், வேந்தினி, நாவேந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காசிக்குமரன்(லண்டன்), காயித்திரிதேவி(கனடா), காஞ்சனாதேவி(ஜேர்மனி), காசினிதேவி(ஆசிரியை - இணுவில் மத்திய கல்லூரி), கௌசலாதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும், ஜெயபாரதி(லண்டன்), பத்மசிறீ(கனடா), ரவீந்திரன்(ஜேர்மனி), புஸ்பமாலினி(ஜேர்மனி), புஸ்பவதனி(கோலண்ட்), பாலசுப்பிரமணியம்(முகாமைத்துவ உதவியாளர், இலங்கை மின்சாரசபை), புஸ்பபாலினி(பிரதேச செயலகம் - தெல்லிப்பழை), உமாசுதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுவேதன், நமிர்தா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், கனோஜன், ஆருஜன்(கனடா), பிரவிகா, அபிசகா, அறிவகன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-01-2012 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று இணுவில் பூவோடை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்(வங்கியடி, இணுவில் கிழக்கு) |
தொடர்புகளுக்கு | ||||
|
No comments:
Post a Comment