8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது தமிழ் மக்களை நான்...
31 December, 2011 by adminஅவரோடு அதிர்வு இணையம் நேர்காணல் ஒன்றை எடுத்துள்ளது. இதில் அவர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். லண்டன் சுவிஸ் ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் GTV மக்கள் பணத்தை நன்கொடையாகப் பெறுவதாகவும் ஆனால் அப் பணம் முழுவதுமாக ஒரு தனி நபருக்கே போய் சேர்வதாகவும் அவர் கூறுகிறார். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் GTV இன் ஏகபோக உரிமையாளர் செல்வி அவர்களின் சொகுசு வீடுகளும் ஆடம்பர காரியாலையங்களின் புகைப்படங்களும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது செல்வி அவர்களுக்கு பீச் ஹவுஸ் என்று சொல்லப்படும் கடற்கரை ஓர செகுசு பங்களா ஒன்றும் இருப்பதாக மேலும் அறியப்படுகிறது. திரு வெங்கடேஷ் அவர்கள் அதிர்வுக்கு தந்த நேர்காணல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
பின்: குறிப்பு:
GTV இன் ஏகபோக உரிமையாளர் செல்வேந்திரன் சீவரட்னம் அவர்கள் அவுஸ்திரேலியாவில் படு செல்வந்தராக வாழ்க்கை நடத்திவருகிறார் என்றும் ! சொத்துக் குவிப்புகள் பீச் ஓரமாக சல்லாப வீடுகளைக் கொள்வனவுசெய்து அதில் ஜாலியாகப் பொழுதைப் போக்குகிறார் என்றும் அவுஸ்திரேலிய தமிழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பெயருக்கு ஏற்றால் போல அவர் செல்வந்தராகவே இருக்கட்டும். ஆனால் லண்டன் உட்பட பல நாடுகளில் வாழும் தமிழர்கள் குழிரிலும் மழையிலும் கஷ்டப்பட்டு வேலைசெய்து இவர் பாக்கெட்டை ஏன் நிரப்பவேண்டும் என சில தமிழ் மக்கள் கருதியதால் GTVக்கு தாம் வழங்கி வந்த மாதாந்தக் கொடுப்பனவுகளை தாம் நிறுத்திவிட்டதாகவும் அதிர்வுக்குத் தெரிவித்துள்ளனர் இவர்கள்.
மக்கள் தொலைக்காட்சி என்று தம்மை தாமே கூறிகொள்ளும் இவர்கள் மக்களுக்கு ஒருபோதும் தமது காசுக் கணக்கை காண்பித்தது இல்லையே. ஒரு நிறுவனம் என்ற அடிப்படையில் விளம்பரப் பணத்தை இவர்கள் கணக்காகக் காட்டவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எப்போது மக்களிடம் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டார்களோ அப்போது அதற்காக கணக்கு வழக்குகளைக் காட்டுவது தானே சரி என மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். GTV இன் உரிமையாளர் செல்வேந்திரனை சுருக்கமாக "செல்வி" என்று அழைப்பது வழக்கமாம். "செல்வி" என்றதும் நீங்கள் ஏதோ ராதிகாவின் சின்னத்திரை நாடகம் என நினைக்கவேண்டாம். இப்ப நடப்பது GTV இன் நாடகம்.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திரு.வெங்கடேஷ் அவர்கள் அதிர்வுக்கு தந்த வாக்குமூலத்தை நாம் ஒலிவடிவில் இணைத்துள்ளோம். மேலதிக ஆதாரங்களும் விரைவில் இணைக்கப்படும்:
வெங்கடேஷ் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக செல்வி என்ன சொல்ல விரும்புகிறார் என்பதனை அறிய அதிர்வு இணையம் அவரைத் தொடர்புகொள்ள பல முறை முயற்சித்தது. இருப்பினும் தொடர்புகளை ஏற்கும் நிலையில் அவர் இல்லை.
No comments:
Post a Comment