[ புதன்கிழமை, 11 சனவரி 2012, 01:08.24 AM GMT ]
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரியின் கணவரை தாக்க முயற்சிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இராமேஸ்வரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்சவின் கணவரான திருக்குமரன் நடேசன் நேற்று இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் வழிபாட்டுக்காக சென்ற வேளை அவரை நாம் தமிழர் கட்சியினரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தினரும் சூழ்ந்துக்கொண்டு கோசங்களை எழுப்பினர்.
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக இதன் போது கோசம் எழுப்பப்பட்டது. எனினும் இதன்போது தாம் தாக்கப்பட்டதாக முன்னதாக வெளியான செய்தியை திருக்குமரன் மறுத்துள்ளதுடன், கோசம் எழுப்பப்பட்ட போதும் தாம் வழிபாடுகளை உரியமுறையில் முடித்துவிட்டே அங்கிருந்து திரும்பியதாக திருக்குமரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த சம்பவத்தை இலங்கையின் இந்திய உதவி உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஸ்ணமூர்த்தி கண்டித்துள்ளார்.

No comments:
Post a Comment